Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
கொள்ளு ரசம் இப்படி வைச்சு சாப்பிடுங்க... உடம்புல இருக்குற பிரச்சினையெல்லாம் சொல்லாம ஓடிப்போயிரும்...!
"இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு" என்னும் பழமொழியை நாம் கேட்டிருப்போம். இதன் அர்த்தம் பூதம் போன்ற உடலையும் கொள்ளு வேகமாக கரைத்து விடும் என்பதாகும். நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்ததற்கு அவர்களின் உணவுமுறை மிகவும் முக்கியமான காரணமாக இருந்து. நம் முன்னோர்கள் கல்லைத் தின்றாலும் செரிக்கும் ஆற்றலுடன் இருந்தார்கள் அதற்குக் காரணம் அவர்கள் உணவில் சேர்த்துக் கொண்ட சில விஷயங்கள்தான்.
கொள்ளு ரசம் நம் முன்னோர்களின் முக்கியமான உணவுகளில் ஒன்றாக இருந்தது. சளி பிடித்தால் நம் அம்மா முதலில் சொல்லும் வார்த்தை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும் என்பதுதான். அந்த அளவிற்கு இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சளி, இருமலை குணப்படுத்துவது முதல் உடல் எடையை குறைப்பது வரை பல்வேறு நன்மைகளை அளிக்கும் இந்த கொள்ளு ரசத்தை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை - ½ ஸ்பூன்
புளி - ½ எலுமிச்சை அளவு
தக்காளி - 1
சீரகம் - 1½ ஸ்பூன்
மிளகு - 1½ ஸ்பூன்
பூண்டு - 5 பல்
வரமிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்ப)
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் நன்றாக பழுத்த தக்காளியை போட்டு முழுகும்
அளவிற்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும்.
- தக்காளியின் தோலில் விரிசல் ஏற்படும் வரை நன்றாக வேக வைக்கவும்.
- பின் அந்த சூடானா நீரில் அரை எலுமிச்சை அளவு புளியை சேர்த்து
தண்ணீர் ஆறும் வரை ஊற விடவும்.
- பின் வாணலியை அடுப்பில் வைத்து கொள்ளு பருப்பை நன்கு சிவக்கும் படி
வறுக்கவும். கொள்ளு வெடிக்க துவங்கியதும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி
ஆறவிடவும்.
- அதே போல் கொத்தமல்லி விதைகளை வாணலியில் சேர்த்து வறுத்து
ஆறவிடவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த கொள்ளு, கொத்தமல்லி விதை, மற்றும்
சிறிதளவு கல்லு உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும்.
- பின் அதனுடன் வரமிளகாய், மிளகு, 4-5 கருவேப்பிலை இலை, மற்றும்
பூண்டு சேர்த்து அரைக்கவும்.
- கடைசியாக சீரகம் சேர்த்து மிக்ஸில் இரண்டு பல்ஸ் விட்டு எடுத்து
கொள்ளவும்.
- தக்காளி மற்றும் புளியை நன்கு கரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.
- இப்போது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பெரிய விடவும்.
- கடுகு பொரிந்ததும் அடுப்பை குறைவான தீயிற்கு மாற்றவும்.
- பின் நாம் அரைத்து வைத்திருக்கும் கலவையை, எண்ணெயில்
சேர்க்கவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வாசம் வர துவங்கியதும், அதனுடன் தக்காளி மற்றும் புளி சாறை
சேர்க்கவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து நுரை
வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் சுவையான கொள்ளு ரசம்
ரெடி!



Click it and Unblock the Notifications











