Latest Updates
-
December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
செட்டிநாடு கத்திரிக்காய் அவியல் குழம்பு ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
வார ராசிபலன் ( November 22-28)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்கள பிரச்சினைகள் விடாம துரத்தப்போகுதாம் -
சிக்கன் வாங்குனா இந்த பாலக்காடு சிக்கன் வறுவலை செஞ்சு பாருங்க - எவ்வளவு செஞ்சாலும் பத்தாது -
தேங்காயில் மூன்று கண்கள் இருப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
நவம்பர் 25-ல் கன்னி ராசிக்குள் நுழையும் செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி ராஜஸ்தான் ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
1800 கோடிக்கு விற்கப்பட்ட ஹிட்லர் காலத்து அதிசய ஓவியம் - இந்த ஓவியத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
காலையில் இந்த ஒரு குழம்பை செஞ்சா போதும்... 3 வேளையும் வெச்சு சாப்பிடலாம்... -
நவம்பர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
Chicken Rasam Recipe In Tamil: நீங்க சிக்கன் வாங்குனா எப்போதும் கிரேவி, குழம்பு என்று தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ரசம் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் சிக்கனைக் கொண்டு ரசம் செய்யுங்கள். இந்த சிக்கன் ரசம் மழை நேரத்தில் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். அதுவும் வெறும் 100 கிராம் சிக்கன் இருந்தாலே போதும் ஒரு குண்டா ரசத்தை வைக்கலாம்.

உங்களுக்கு இந்த சிக்கன் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
* தக்காளி - 3
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 2-3
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* எலும்புள்ள சிக்கன் - 150 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த ரச விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை நீரில் ஊற வைத்து,
சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த புளிச்சாற்றுடன் 3 தக்காளியை சேர்த்து, கைகளால் நன்கு
பிசைந்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், மல்லி, பூண்டு, இஞ்சி,
வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கீறி
வைத்துள்ள 1 பச்சை மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் எலும்புள்ள சிக்கனை கழுவி சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள ரச விழுதை சேர்த்து நன்கு 2
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, உப்பு சுவை பார்த்து,
வேண்டுமானால் நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து 15-20 நிமிடம் நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்த பின், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,
சுவையான சிக்கன் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications
