Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
1 கப் பொட்டுக்கடலையும், 5 ரூபாய் பூஸ்ட்டும் இருந்தா.. ரம்ஜானுக்கு இப்படியொரு ஸ்வீட் செஞ்சு கொடுங்க..
Ramzan Special Chocolate Burfi Recipe In Tamil: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களின் வீடுகளில் வெறும் பிரியாணியும், அசைவ உணவுகளும் மட்டும் சமைக்கப்படுவதில்லை. பல்வேறு சுவையான இனிப்பு பலகாரங்களும் செய்யப்படுவதுண்டு. ரம்ஜான் நாளில் எப்போதும் வழக்கமாக செய்யும் ஸ்வீட்களை தான் செய்வீர்களா?
அப்படியானால் இந்த ரம்ஜான் பண்டிகையன்று இதுவரை நீங்கள் செய்திராத ஒரு வித்தியாசமான அதே சமயம் சுவையான ஒரு பர்பியை செய்யுங்கள். அதுவும் பொட்டுக்கடலையையும், பூஸ்ட்டையும் கொண்டு செய்யுங்கள்.

கீழே பொட்டுக்கடலையையும், பூஸ்ட்டையும் கொண்டு எப்படி பர்பி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொட்டுக்கடலை - 1 கப்
* பூஸ்ட் - 1 பாக்கெட் (5 ரூபாய் பாக்கெட்)
* சர்க்கரை - 1 கப்
* ஏலக்காய் - 2
* முந்திரி - 8
* நெய் - 1/4 கப்
* காய்ச்சிய பால் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் பூஸ்ட் சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை சல்லடையில் போட்டு நன்கு சலித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே மிக்சர் ஜாரில் 1 கப் சர்க்கரையை சேர்த்து, அத்துடன்
ஏலக்காய், முந்திரி சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதையும் சல்லடையில் போட்டு நன்கு சலித்துக் கொள்ள வேண்டும்.
பின் பொட்டுக்கடலை கலவையும், சர்க்கரையும் நன்கு ஒன்று சேரும் வரை
கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு நாண்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய்யை
ஊற்றி சூடானதும், பொட்டுக்கடலை கலவையை சேர்த்து, நன்கு ஓரளவு நிறம்
மாறும் வரை நன்கு வறுக்க வேண்டும்.
* பொட்டுக்கடலை மாவின் நிறம் மாறத் தொடங்கியதும், அதில் காய்ச்சி ஆற
வைத்த பாலை ஊற்றி நன்கு 2 நிமிடம் கட்டிகளின்றி கிளறி விட
வேண்டும்.
* பின் ஒரு அகலமான தட்டில் நெய்யைத் தடவி, வாணலியில் உள்ளதை அப்படியே
தட்டில் கொட்டி, சமமாக பரப்பி விட வேண்டும்.
* பின்பு அதை 10 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் கத்தியால் அவற்றை சதுரத் துண்டுகளாக வெட்டினால், சுவையான
சாக்லேட் பர்பி தயார்.
Image Courtesy: Cook Click N Devour!!!



Click it and Unblock the Notifications