Latest Updates
-
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Ramzan Nombu Kanji Recipe : ரம்ஜான் நோன்பு கஞ்சி
நோன்பு கஞ்சியை இறைச்சி அல்லது காய்கறிகளைக் கொண்டும் செய்யலாம். இந்த நோன்பு கஞ்சி அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.
ரமலான் மாதத்தில் மசூதிகளில் மாலை நேரங்களில் நோன்பு கஞ்சியை ஊற்றுவார்கள். இந்த நோன்பு கஞ்சியை வாங்கிக் குடித்தவர்கள் பலரும், அதை எப்படி வீட்டில் செய்வதென்று யோசித்திருப்பார்கள். நோன்பு கஞ்சியை இறைச்சி அல்லது காய்கறிகளைக் கொண்டும் செய்யலாம். இந்த நோன்பு கஞ்சி அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும். சொல்லப்போனால், பலரும் இந்த நோன்பு கஞ்சிக்காகவே ரமலான் மாதத்தை எதிர்பார்ப்பதுண்டு.

நீங்கள் இந்த நோன்பு கஞ்சியை உங்கள் வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா? கீழே ரம்ஜான் நோன்பு கஞ்சியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி/சீரக சம்பா அரிசி - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 1/8 கப்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கேரட் - 1/4 கப் (நறுக்கியது)
* புதினா - 1/4 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* தண்ணீர் - 3 கப்
* கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
* நீர்ப்போன்ற தேங்காய் பால் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலா பொடி...
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* பச்சை மிளகாய் - 1
செய்முறை:
* முதலில் 1/2 கப் பச்சரிசி மற்றும் 1/8 கப் பாசிப்பருப்பை எடுத்து நீரில் நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, 10 நிமிடம் உலர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் அந்த அரிசி மற்றும் பாசிப்பருப்பை கொரகொரவென்று அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின் கேரட், புதினா சேர்த்து, அதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கிளறி, 3 கப் நீரை ஊற்றி கிளற வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 கப் நீர்போன்ற தேங்காய் பாலை சேர்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரை திறந்து, மசித்து விடுங்கள். கெட்டியாக இருந்தால், சிறிது நீர் சேர்த்து கலந்து மசித்துவிடுங்கள்.
* அடுத்து அதில் 1/2 கப் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவினால், ரம்ஜான் நோன்பு கஞ்சி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
