Latest Updates
-
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா?
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
Rajasthani Pancharatna Dal Recipe in Tamil: சப்பாத்தி, பூரிக்கு ஒரே மாதிரியான குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் சுவையாகவும் ஒரு சைடிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் ராஜஸ்தான் ஸ்டைலில் ஒரு பஞ்சரத்ன பருப்புக் குழம்பை செய்யுங்கள். இந்த ராஜஸ்தானி பருப்பு குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்துடனும் சாப்பிட வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பை ஒருமுறை செய்தால், நிச்சயம் வாரம் ஒருமுறை இந்த குழம்பை வீட்டில் செய்வீர்கள். அந்த அளவிற்கு எளிமையாகவும், செய்வதற்கு சுலபலமாகவும் இருக்கும்.

உங்களுக்கு வித்தியாசமான ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/4 கப் துவரம் பருப்பு
- 1/4 கப் பாசிப் பருப்பு
- 1/4 கப் மைசூர் பருப்பு (சிவப்புப் பருப்பு)
- 1/4 கப் பாசிப் பயறு
- 1/4 கப் கருப்பு உளுந்து
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் உப்பு
- 3 கப் தண்ணீர்
- 1 டீஸ்பூன் நெய்
பருப்பு தாளிக்க:
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய்
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 4 பல் பூண்டு (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி (பொடியாக நறுக்கியது)
- 3/4 கப் தக்காளி (நறுக்கியது)
- 1 டீஸ்பூன் மல்லித் தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 3/4 கப் தண்ணீர்
- 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
- தேவையான அளவு உப்பு
அலங்கரிக்க:
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- அரை ஸ்பூன் கசூரி மேத்தி
- 1 டீஸ்பூன் நெய்
செய்முறை:
- முதலில் அனைத்து பருப்புகளையும் நன்றாக கழுவி ஊற வைக்கவும்.
- ஊறவைத்த பருப்புகளுடன் தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு மற்றும் நெய் சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும், பின்னர் 1 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- ஒரு வாணலியில் நெய்யைச் சூடாக்கி, சீரகம் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய தக்காளி சேர்த்து, குழைந்துபோகும் வரை சமைக்கவும்.
- அதன்பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தொக்கு பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
- அதன்பின் வேகவைத்த பருப்பு வகைகளை சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி, 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- இறுதியாக கரம் மசாலா, கசூரி மேத்தி, கொத்தமல்லி இலைகள் மற்றும் நெய் ஆகியவற்றைச் சேர்த்து, உப்பு சரிபார்த்து, மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்தால் சுவையான ராஜஸ்தானி ஸ்டைல் பஞ்சரத்ன கூட்டு ரெடி!



Click it and Unblock the Notifications
