Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க..
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்
Madras Chicken Curry Recipe in Tamil: அசைவ உணவு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன்தான். அதற்குக் காரணம் அதன் சுவையும், அதை சமைப்பதில் உள்ள எண்ணற்ற வெரைட்டிகளும்தான். உங்களுக்கு வழக்கமான சிக்கன் வறுவல், குழம்பு சாப்பிட்டு போரடித்து விட்டதா? அடுத்தமுறை சிக்கனை புது ஸ்டைலில் டேஸ்டாக சமைக்க ஆசைப்படுறீங்களா? அப்படினா இந்த மெட்ராஸ் சிக்கன் குருமாவை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த மெட்ராஸ் சிக்கன் குருமா சாதத்துடன் மட்டுமின்றி புரோட்டா, சப்பாத்தி, தோசை போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இது பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட, சுவை வேற லெவலில் இருக்கும். இந்த சிக்கன் குருமாவை செய்வதும் மிகவும் சுலமாகும்.
உங்களுக்கு மெட்ராஸ் சிக்கன் குருமா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மெட்ராஸ் சிக்கன் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கிலோ சிக்கன்
- 2 தக்காளி
- 10 பல் பூண்டு
- 2 இன்ச் இஞ்சி
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 2 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1/2 ஸ்பூன் சோம்பு
- 3 கிராம்பு
- 3 ஏலக்காய்
- 2 இன்ச் பட்டை
- 2 கொத்து கறிவேப்பிலை
- 6 பச்சை மிளகாய்
- 4 ஸ்பூன் துருவிய தேங்காய் (1/2 கப் தண்ணீர் சேர்த்து விழுதாக
அரைத்தது)
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை(பொடியாக நறுக்கியது)
செய்முறை:
- முதலில் சிக்கனை நன்றாக கழுவி, ஒரு பிரஷர் குக்கரில் போடவும். 2 தக்காளிகளை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து, அதை குக்கரில் சேர்க்கவும்.
- இஞ்சி மற்றும் பூண்டை 1/4 கப் தண்ணீருடன் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து குக்கரில் சேர்க்கவும்.
- அதன்பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
- அதன்பின் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும். அதனுடன் உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, குக்கரில் உள்ள அழுத்தம் தானாகவே வெளியேறும் வரை காத்திருக்கவும். அழுத்தம் வெளியேறியதும் குக்கரை திறந்து அதை தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் சோம்பு, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டை ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.
- அவை பொரிந்ததும், சமைத்து வைத்துள்ள சிக்கன் கறியை அதில் சேர்க்கவும்.
- அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் அரைத்த தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- தேங்காய் பச்சை வாசனை போகும் மிதமான தீயில் கொதிக்கவிடவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மெட்ராஸ் சிக்கன் குருமா ரெடி!



Click it and Unblock the Notifications
