Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
1 கொய்யாப்பழம் இருந்தா... ஒருடைம் இந்த சட்னியை ட்ரை பண்ணிப் பாருங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Rajastani Guava Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னியை தான் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சட்னியை தான் அடிக்கடி செய்வீர்களா? இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னியை செய்திருக்கலாம். ஆனால் கொய்யாப்பழத்தைக் கொண்டு சட்னி செய்துள்ளீர்களா? என்ன ஆச்சரியமாக உள்ளதா?
ஆம், கொய்யாப்பழத்தைக் கொண்டும் சட்னி செய்யலாம். இந்த சட்னி வழக்கமாக சாப்பிடும் சட்னியில் இருந்து வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டில் கொய்யாப்பழம் ஒன்று இருந்தால், ஒருமுறை இந்த சட்னியை ட்ரை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

உங்களுக்கு ராஜஸ்தானி கொய்யாப்பழ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராஜஸ்தானி கொய்யாப்பழ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காஷ்மீரி வரமிளகாய் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* கொய்யாப்பழம் - 1
* நாட்டுச்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 5-6 காஷ்மீரி வரமிளகாய், 1 டீஸ்பூன்
சீரகம், சிறிது உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது கொத்தமல்லி மற்றும் 1 நறுக்கிய கொய்யாப்பழத்தை
சேர்த்து, சிறிது நாட்டுச்சர்க்கரையையும் சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொண்டால், சுவையான ராஜஸ்தானி கொய்யாப்பழ சட்னி தயார்.
5 மினிட் ஸ்பெஷல் இட்லி பொடி....
தேவையான பொருட்கள்:
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - பாதி
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 2 பல்
* உப்பு - சிறிது
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பாதி வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், 2 பல் பூண்டு, சிறு துண்டு
புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* இப்போது சுவையான இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி தயார். இத்துடன்
நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, இட்லி, தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக
இருக்கும்.



Click it and Unblock the Notifications
