Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
1 கப் ராகி மாவு, 1 கப் பாசிப்பருப்பு வெச்சு.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Ragi Pasiparuppu Uthappam Recipe in Tamil: காலையில் தோசை சுட வீட்டில் மாவு இல்லையா? சற்று சத்தான அதே சமயம் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடுமாறான காலை உணவை செய்ய வேண்டுமா? வீட்டில் ராகி மாவு உள்ளதா?
அப்படியானால் அந்த ராகியுடன், பாசிப்பருப்பை சேர்த்து ஊத்தாப்பம் செய்யுங்கள். இந்த ஊத்தாப்பம் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். இந்த ஊத்தாப்பத்திற்கு சைடு டிஷ் எதுவும் தேவைப்படாது. அப்படியே கூட சாப்பிடலாம்.

உங்களுக்கு ராகி பாசிப்பருப்பு ஊத்தாப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பாசிப்பருப்பு ஊத்தாப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* ராகி மாவு - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு
* சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில்
சுத்தமான நீரை ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, ஊற வைத்த பாசிப்பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன்
ராகி மாவை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சோடா உப்பையும் சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி,
கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கலந்து வைத்துள்ள தோசை
மாவை கல்லில் ஊற்றி சற்று மொத்தமாக ஊத்தாப்பம் போன்று தேய்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதன் மேல் கலந்து வைத்துள்ள தக்காளி வெங்காய கலவையை வைத்து
பரப்பி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்க
வேண்டும்.
* பின்பு ஊத்தாப்பத்தை திருப்பிப் போட்டு, அழுத்தி விட்டு, சிறிது
நேரம் வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி பாசிப்பருப்பு ஊத்தாப்பம்
தயார்.



Click it and Unblock the Notifications