Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தினமும் காலையில் 1 டம்ளர் இந்த ராகி பாலை குடிங்க..அப்புறம் பாருங்க எப்படி ஒல்லியானீங்க-ன்னு கேப்பாங்க..
Ragi Paal Recipe In Tamil: காலை வேளையில் தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது சற்று வித்தியமாசமாக சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா?
அப்போது ராகியை தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்து, அந்த பாலை அடுப்பில் வைத்து, நன்கு காய்ச்சி இறக்கி, சுவைக்கேற்ப இனிப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறினால், சுவையான ராகி பால் தயார். இந்த பாலை அவ்வப்போது காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் வலுவாக இருக்கும் மற்றும் தொப்பையும் குறையும்.

உங்களுக்கு ராகி பாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கெள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி - 4 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 2 பெரிய சில்லு
* தண்ணீர் - தேவையான அளவு
* ஏலக்காய் - 1
* உப்பு - 1 சிட்டிகை
* நாட்டுச்சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ராகியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதை 2-3 முறை கைகளால்
நன்கு பிசைந்து விட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க
வேண்டும்.
* மறுநாள் காலையில் மிக்சர் ஜாரில் ஊற வைத்த ராகியை சேர்த்து,
அத்துடன் தேங்காய் துண்டுகளையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான பாத்திரத்தின் மேல் மெல்லிய துணியை விரித்து,
அதில் அரைத்த ராகியை ஊற்றி, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த ராகி பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
வைத்து, தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* பாலானது சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் 1 சிட்டிகை உப்பு
மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து, அத்துடன் ஏலக்காயை தட்டிப் போட்டு
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு சுடுநீரை ஊற்றி நன்கு கிளறி கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான ராகி பால் தயார்.



Click it and Unblock the Notifications