Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
1 கப் ராகி மாவும், 1 கப் வேர்க்கடலையும் வெச்சு.. இந்த உருண்டையை செஞ்சு தினமும் 1 சாப்பிடுங்க.. சத்தானது..
Ragi Laddu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் மற்றும் உங்கள் பிள்ளைகள் வலுவிழந்து பலவீனமாக இருப்பதை உணர்கிறீர்களா? அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? வீட்டில் ராகி மாவும், வேர்க்கடலையும் இருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு உருண்டை செய்யுங்கள். இந்த உருண்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
முக்கியமாக இந்த உருண்டையை ஒருமுறை செய்தால் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். இந்த உருண்டையை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலுபெறும், இரத்தம் நன்கு ஊறும். வளரும் குழந்தைகளுக்கு இந்த உருண்டையை தினமும் கொடுத்து வந்தால், அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

உங்களுக்கு ராகி லட்டு/ராகி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* ராகி மாவு - 1 1/4 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* பொடித்த பனங்கருப்பட்டி - 3/4 கப்
* ஏலக்காய் - 2
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, சூடேற்றி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை
உப்பு சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, புட்டு மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு துணியில் அந்த ராகி மாவை போட்டு, மூட்டை போன்று
கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து
வேக வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு தட்டில் வேக வைத்த ராகி மாவை போட்டு, கைகளால்
உதிர்த்துவிட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை மற்றும் பொடித்த
பனங்கருப்பட்டியை சேர்த்து, அத்துடன் ஏலக்காயையும் சேர்த்து, விட்டு
விட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் வேக வைத்த ராகி மாவை சேர்த்து விட்டு விட்டு அரைத்து,
ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கைகளால் கிளறி, லட்டு
போன்று கொஞ்சம் எடுத்து உருட்டிக் கொண்டால், ராகி லட்டு தயார்.



Click it and Unblock the Notifications








