Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
1 1/2 கப் ராகி மாவு இருந்தா.. ஈவ்னிங் பசங்களுக்கு இந்த ஸ்வீட்டை செஞ்சு கொடுங்க.. சுவையானதும்.. சத்தானதும் கூட.
Ragi Kozhukattai Recipe In Tamil: மாலை வேளையில் ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைக்கு நல்ல சத்தான ஸ்நாக்ஸை கொடுத்து, பசியை போக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகி மாவைக் கொண்டு கொழுக்கட்டை செய்து கொடுங்கள்.
இப்படி குழந்தைகளுக்கு ராகி மாவை கொண்டு கொழுக்கட்டை செய்து கொடுக்கும் போது, உடலுக்கு வேண்டிய முக்கியமான சத்துககள் கிடைத்து, உடல் வலுவோடு இருக்கும். மேலும் இதுவரை உங்கள் குழந்தைகள் ராகி சாப்பிடமாட்டார்களானால், இப்படி செய்து கொடுக்கும் போது கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கொழுக்கட்டை எண்ணெயில் பொரிக்காமல் ஆவியில் வேக வைப்பதால், இன்னமும் சத்தானது.

உங்களுக்கு ராகி கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 1/2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* கொதிக்கும் சுடுநீர் - தேவையான அளவு
* வெல்லம் - 150 கிராம்
* தண்ணீர் - 1 கப்
* துருவிய தேங்காய் - 1 கப்
* நன்கு பழுத்த நேந்திரம் பழம் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* பாதாம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பிஸ்தா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* ஏலக்காய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* எண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் ராகி மாவை எடுத்துக்
கொண்டு, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து கைகளால் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் கொதிக்கும் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கரண்டியால்
கிளறி விட்டு, மாவை சற்று குளிர வைக்க வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் மாவை நன்கு மென்மையாக
பிசைந்து, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து, மூடி வைத்து 5
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் ஒரு பாத்திரத்தில் 150 கிராம் வெல்லத்தை பொடித்து எடுத்து,
அதில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம் கரையும் வரை
கொதிக்க வைக்க வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், ஒரு வாணலியில் இந்த வெல்ல நீரை வடிகட்டி
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் துருவிய தேங்காயை சேர்த்து, அத்துடன்
துண்டுகளாக்கப்பட்ட 2 நேந்திரம் பழத்தை சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதில் பாதாம், பிஸ்தா, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி,
அடுப்பில் வைத்து, நீர் வற்றும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* வாழைப்பழமானது நன்கு மசிந்து, நீர் வற்றியதும், அடுப்பை
அணைத்துவிட்டு, அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள ராகி மாவை எடுத்து, அதில் 1 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பின் சிறிது மாவை எடுத்து உருட்டி, ஒரு பாலிதீன் கவர் அல்லது வாழை
இலையில் எண்ணெய் தடவி, அதன் மேல் வைத்து, தட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் வாழைப்பழ கலவையை சிறிது எடுத்து உருட்டி, தட்டி
வைத்துள்ள ராகி மாவின் நடுவில் வைத்து மடித்து மூடி, பின் விரிசல்
இல்லாதவாறு நன்கு உருட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து
மாவையும் செய்ய வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டில் செய்து வைத்துள்ள
கொழுக்கட்டைகளை வைத்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து மூடி 10 நிமிடம்
வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications
