Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
Ragi Dosa With Thakkali Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் இட்லி, தோசை மாவு எதுவும் இல்லையா? வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகி மாவைக் கொண்டு மொறுமொறுப்பான ராகி தோசையையும், அதற்கு சைடு டிஷ்ஷாக தக்காளி சட்னியையும் செய்யுங்கள். இந்த டிபன் காம்போ நிச்சயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த ராகி தோசையும், தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி தோசை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ராகி தோசைக்கு...
* ராகி மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* ரவை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* சீரகம் - 1/2
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3
* தக்காளி - 2
* வரமிளகாய் - 5
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, ரவை,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி கட்டிகளின்றி
கலந்து, பின் தோசை மாவு பதத்திற்கு நீரை ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்யலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பை
சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வரமிளகாய், காஷ்மீரி
வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வெங்காயமும்,
தக்காளியும் வதங்கும் வரை வதக்க வேண்டும்.
* வெங்காயம் தக்காளி வதங்கியதும், அதை இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிக்க எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை ஊற்றி கிளறி
இறக்கினால், சுவையான தக்காளி கடலைப்பருப்பு சட்னி தயார்.
* இப்போது ஊற வைத்த ராகி மாவை கிளறினால், மாவு சற்று
கெட்டியாகியிருக்கும். இந்நிலையில் அதில் சீரகம், பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை
சேர்த்து நன்கு கலந்து, ரவா தோசை பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ரவா தோசை சுடுவது
போன்று, மாவை அள்ளி ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து,
மொறுமொறுவென்று வந்ததும் எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான
ராகி தோசை தயார்.



Click it and Unblock the Notifications
