Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
1 கப் ராகி மாவும், 1 கப் ரவையும் இருந்தா போதும்... அட்டகாசமான சுவையில் தோசை சுடலாம்...
Ragi Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் தோசை மாவு காலியாகிவிட்டதா? காலையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ராகி மாவும், ரவையும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டே அட்டகாசமான சுவையில் ஒரு தோசையை சுடலாம்.
இந்த ராகி தோசையை செய்வது என்பது மிகவும் சுலபம். மேலும் இது சத்தானதும் கூட. அடிக்கடி ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடம்பு இரும்பு போன்று வலுவாக இருக்கும் என்பார்கள். அதுவும் இந்த ராகி தோசைக்கு தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்து சாப்பிட்டால் இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு ராகி தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* ரவை - 1 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* தயிர் - 1/2 கப்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் -1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 1/2 கப்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, ரவை, அரிசி மாவு ஆகியவற்றை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தயிர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், சீரகம், மிளகுத் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1-2 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின் அதை 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, நீர் பதத்திற்கு மாவை கலந்து
கொள்ள வேண்டும்.
* அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும்,
கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து நன்கு
பொன்னிறமாக முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி
தோசை தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications
