Latest Updates
-
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும்
முள்ளங்கி சட்னி
இதுவரை முள்ளங்கியைக் கொண்டு சாம்பார் தான் செய்திருப்பீர்கள். ஆனால் முள்ளங்கியைக் கொண்டு சட்னி செய்யலாம் என்பது தெரியுமா?
இதுவரை முள்ளங்கியைக் கொண்டு சாம்பார் தான் செய்திருப்பீர்கள். ஆனால் முள்ளங்கியைக் கொண்டு சட்னி செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், முள்ளங்கியைக் கொண்டு சட்னி செய்தால், அது இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். நீங்கள் சற்று வித்தியாசமான சட்னி செய்ய நினைத்தால், அதற்கு முள்ளங்கி சட்னி பொருத்தமாக இருக்கும்.

உங்களுக்கு முள்ளங்கி சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி சட்னியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முள்ளங்கி - 2 கப் (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதை - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பூண்டு பல் - 2
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலை பருப்பு, மல்லி விதைகள், பூண்டு, வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பின்பு வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின் முள்ளங்கியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மூடி வைத்து 5-7 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.
* பிறகு முள்ளங்கி வெந்துவிட்டதா என்று ஒரு ஸ்பூன் கொண்டு வெட்டிப் பார்க்கவும். முள்ளங்கி எளிதில் வெட்டப்பட்டால், அடுப்பை அணைத்துவிட்டு, வாணலியை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்ஸர் ஜாரில் வதக்கிய பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்த்து கிளறினால், சுவையான முள்ளங்கி சட்னி தயார்!
குறிப்பு:
* சட்னிக்கு பொருட்களை வதக்கும் போது, முள்ளங்கியை நன்கு வேக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்னியில் முள்ளங்கியின் பச்சை வாசனை வீசி, சட்னியின் சுவை பாழாகிவிடும்.
* உங்களுக்கு சட்னி குறைவான காரத்தில் இருக்க வேண்டுமானால், வரமிளகாயைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
* முள்ளங்கி சட்னிக்கு வெள்ளை முள்ளங்கியை மட்டுமின்றி, சிவப்பு முள்ளங்கியையும் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications