Latest Updates
-
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
ஒருமுறை இந்த பக்குவத்துல சிக்கன் கிரேவியை செய்யுங்க.. பூரி, சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...
Quick Chicken Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் இன்று சிக்கன் எடுத்துள்ளீர்களா? காலையில் பூரி, சப்பாத்திக்கு சிக்கன் கிரேவியை சைடு டிஷ் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் ஒருமுறை சிக்கன் கிரேவியை இந்த பக்குவத்தில் செய்யுங்கள். இப்படி செய்தால், பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.
முக்கியமாக இது 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு எளிமையாக இருக்கும். அதே சமயம் டேஸ்ட்டும் அற்புதமாக இருக்கும். பேச்சுலர்கள் டக்குன்னு டேஸ்டியான சிக்கன் கிரேவியை செய்ய நினைத்தால், இந்த கிரேவியை ட்ரை செய்யலாம்.

உங்களுக்கு சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கறி மசாலா தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/4 டம்ளர்
* உப்பு - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து
நன்கு பிரட்டி, நீரில் 2 முறை கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தை சேர்த்து லேசான பொன்னிறத்திற்கு மாறும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு
பேஸ்ட்டையும் சேர்த்து, நன்கு பச்சை வாசனை நீங்கி மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின் அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கறி மசாலா
தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, 1/4
டம்ளர் நீரை தெளித்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 7-8
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* உங்களுக்கு கிரேவியாக வேண்டுமானால், நீராக இருக்கும் போது அடுப்பை
அணைத்துவிடலாம். இல்லாவிட்டால், நீரை சற்று சுண்ட வைத்து பின்
இறக்கலாம்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான சிக்கன் கிரேவி 15
நிமிடத்தில் தயார்.



Click it and Unblock the Notifications