Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு... மழைக்காலத்துல சாப்பிட சிறந்த ஸ்னாக்ஸ் இதுதான்... எப்படி செய்யணும் தெரியுமா?
Andhra Special Punugulu Recipe: மழைக்காலம் வந்தாலே ஜில்லென்ற க்ளைமேட்டுக்கு சூடான பலகாரம் சாப்பிட அனைவரும் விரும்புவார்கள். வழக்கமாக பஜ்ஜி, போண்டா மற்றும் மிக்சர் சாப்பிடுவதற்குப் பதிலாக அக்கட தேசத்தை சேர்ந்த ஆந்திரா புனுகுலு செய்து சாப்பிடுவது உங்கள் மழைக்கால மாலை நேரப்பொழுதை மேலும் ரம்மியமானதாக மாற்றும்.
புனுகுலு என்பது ஆந்திராவில் ஒரு பிரபலமான தேநீர் நேர சிற்றுண்டியாகும், இது அரிசி, உளுத்தம் பருப்பை ஊறவைத்து புளிக்கவைத்து தயாரிக்கப்படுகிறது. சிலசமயங்களில் எஞ்சியிருக்கும் மாவைப் பயன்படுத்தியும் புனுகுலு செய்யலாம். இது நம்ம மதுரை வெள்ளையப்பம் போன்றது. இந்த சுவையான மாலை நேர பொருளை எப்படி செய்யலாமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் இட்லி மாவு
- 2 டீஸ்பூன் மைதா
- 2 டீஸ்பூன் அரிசி மாவு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 3-4 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை
- ½ தேக்கரண்டி உப்பு
- 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- எண்ணெய் வறுக்கத் தேவையான அளவு
- ஒருவேளை உங்களிடம் இட்லி மாவு இல்லையென்றால் 2 கப் இட்லி அரிசி மற்றும் 1 கப் உளுத்தம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- இதை நன்றாக மாவாக அரைத்து 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ளவும்.
- உங்களிடம் இட்லி மாவு இல்லையென்றால் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக
ஊறவைத்து, அதிக தண்ணீர் சேர்க்காமல் மென்மையான பேஸ்டாக
அரைக்கவும்.
- உப்பு சேர்த்து இதை 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும். இதனுடன்
நீங்கள் 2 டீஸ்பூன் புளிப்பு தயிர் சேர்க்கலாம் மற்றும்
புளிக்கவைப்பதைத் தவிர்க்கலாம், ஆனால் புளித்த மாவே சரியான சுவையைத்
தரும்.
- இதில் பொடியாக நறுக்கிய மிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை,
வெங்காயம் சேர்க்கவும்.
- இத்துடன் அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- மாவை பஞ்சுபோன்றதாக மாற்ற கரண்டியால் இதை நன்றாக அடிக்கவும். இது
ஒரு சரியான அமைப்பைக் கொடுக்கிறது மற்றும் உள் பகுதியை மென்மையாக
வைத்திருக்கும்.
- ஆழமாக வறுக்க எண்ணெயை சூடாக்கவும்.
- மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போடவும்.
ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.
- மிதமான தீயில் ஆழமாக வறுக்கவும்.
- ஒரு பக்கம் கோல்டன் பிரவுன் கலர் ஆனதும், போண்டாக்களை
புரட்டவும்.
- இருபுறமும் ஆழமாக வறுக்கப்பட்ட பின் கடாயில் இருந்து வெளியே
எடுக்கவும்.
- பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை வடிகட்டவும்.
- சூடான ஆந்திரா புனுகுலு தயார். இதை தேங்காய் சட்னி மற்றும் கார
சட்னியுடன் பரிமாறினால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications
