Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
பஞ்சாபி ராஜ்மா மசாலா
உங்கள் வீட்டில் ராஜ்மா என்னும் சிவப்பு காராமணி உள்ளதா? அதைக் கொண்டு ஒரு அற்புதமான ரெசிபி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வடஇந்தியாவில் மிகவும் பிரபலமான பஞ்சாபி ராஜ்மா மசாலா செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் ராஜ்மா என்னும் சிவப்பு காராமணி உள்ளதா? அதைக் கொண்டு ஒரு அற்புதமான ரெசிபி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வடஇந்தியாவில் மிகவும் பிரபலமான பஞ்சாபி ராஜ்மா மசாலா செய்யுங்கள். இந்த பஞ்சாபி ராஜ்மா மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு பஞ்சாபி ராஜ்மா மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாபி ராஜ்மா மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராஜ்மா/சிவப்பு காராமணி - 3/4 கப்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உலர்ந்த வெந்தயக் கீரை - 1 சிட்டிகை
* பால் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* மல்லி - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 2
செய்முறை:
* முதலில் காராமணியை 8 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் அதை 2-3 முறை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, காராமணி மூழ்கும் வரை நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கரம் மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வேக வைத்துள்ள ராஜ்மா/காராமணியை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவியானது ஓரளவு கெட்டியாக ஆரம்பித்ததும், அதில் பால் சேர்த்து கிளறி 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லி, காய்ந்த வெந்தய கீரை சேர்த்து கிளறினால், சுவையான பஞ்சாபி ராஜ்மா மசாலா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
