Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
பஞ்சாபி தாபா ஸ்டைல் சன்னா மசாலா டேஸ்ட்டியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க..
Punjabi Dhaba Style Channa Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தியை அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சன்னா மசாலாவை அடிக்கடி செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் சன்னா மசாலா செய்வீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை சன்னா மசாலா செய்வதாக இருந்தால், பஞ்சாபி தாபா ஸ்டைல் சன்னா மசாலாவை செய்யுங்கள். இந்த சன்னா மசாலாவின் சுவையே தனி தான். இப்படி பஞ்சாபி தாபா ஸ்டைல் சன்னா மசாலா சுவையாக இருப்பதன் ரகசியம், அதில் அரைத்து சேர்க்கப்படும் மசாலாவும், கடைசியாக சேர்க்கும் தாளிப்பும் தான்.

உங்களுக்கு பஞ்சாபி தாபா ஸ்டைல் சன்னா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாபி தாபா ஸ்டைல் சன்னா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப் (8 மணிநேரம் ஊற வைத்தது)
* பிரியாணி இலை - 1
* கருப்பு ஏலக்காய் - 3
* உருளைக்கிழங்கு - 1
* தண்ணீர் - தேவையான அளவு
மசாலா அரைப்பதற்கு..
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 2 இன்ச்
* கெட்டி தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - பாதி
* வேக வைத்த கொண்டைக்கடலை - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சன்னா மசாலா - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
ஸ்பெஷல் தாளிப்பு...
* நெய் - 1 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1 (விதைகளை நீக்கியது)
* இஞ்சி - 1 1/2 இன்ச் (நீளவாக்கில் நறுக்கியது)
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் 8 மணிநேரம் ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு,
அத்துடன் 1 பிரியாணி இலை, 3 கருப்பு ஏலக்காய், 1 முழு உருளைக்கிழங்கு
மற்றும் கடலை மூழ்கும் அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில்
வைத்து, 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள பிரியாணி இலை மற்றும்
கருப்பு ஏலக்காயை நீக்கிவிட்டு, உருளைக்கிழங்கை எடுத்து, அதன் தோலை
நீக்கி இரண்டாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கெட்டித்
தயிர், பாதி வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் சிறிது வேக வைத்த
கொண்டைக்கடலையை சேர்த்து, கொஞ்சம் நீரை ஊற்றி, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அடிகனமான ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சன்னா
மசாலா ஆகியவற்றை சேர்த்து, குறைவான தீயில் வைத்து கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, எண்ணெய் பிரிய
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த கொண்டைக்கடலையை நீருடன் சேர்த்து கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பின் மீதமுள்ள பாதி உருளைக்கிழங்கை
துண்டுகளாக்கி சேர்த்து கிளறி, மூடி வைத்து 10-12 நிமிடம் நன்கு
கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில்
தாளிப்பதற்கு நெய் ஊற்றி சூடானதும், விதைகளை நீக்கிய வரமிளகாய்,
நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி, கசூரி மெத்தி, பெருங்காயத் தூள்,
காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து தாளித்து, சன்னா மசாலாவுடன் சேர்த்து,
அத்துடன் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான பஞ்சாபி தாபா ஸ்டைல்
சன்னா மசாலா தயார்.



Click it and Unblock the Notifications