Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
பஞ்சாப் ஸ்டைல் பூண்டு சட்னி ரெசிபி... இந்த மாதிரி செஞ்சுபாருங்க... இட்லி, தோசைக்கு வேற லெவல் சைடிஷா இருக்கும்!
Punjab Style Garlic Chutney Recipe in Tamil: தினமும் வீட்டில் காலை அல்லது இரவு இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி செய்வது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாகிவிட்ட ஒன்று. அதற்கும் விதவிதமாய் வித்தியாசமாய் சட்னி குழம்பு வகைகளை செய்வது என்பது தினமும் தொடரும் முடிவிலா போராட்டமாக மாறிவிட்டது. என்ன தான் சைடிஷை சுவையாக செய்தாலும் நாளடைவில் அது அலுப்பு தட்டிவிடும். அதற்கு என்ன செய்ய முடியும் என்கிறீர்களா? சில பொருட்களை கூட்டி அல்லது குறைத்து சுவையை தான் மாற்ற முடியும். ஒவ்வொரு ஊரிலும் சட்னிகளின் சுவை வேறுபட காரணம் இதுதான்.
பொதுவாக பூண்டு சட்னி என்பது இட்லி, தோசைக்கு சைடிஷாக செய்யப்படும் ஒரு தரமான சைடிஷாகும். இந்த காரமான பூண்டு சட்னி என்பது பொதுவாக வர மிளகாய் மாற்றும் பூண்டு வைத்து தயாரிக்கப்படும். ஆனால் பஞ்சாப் ஸ்டைல் பூண்டு சட்னி என்பது இந்த இரண்டுடன் வேறுசில பொருட்களை சேர்த்து கூடுதல் சுவையுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த பஞ்சாப் பூண்டு சட்னி இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு அற்புதமாக இருக்கும். மேலும் இதை சாதத்தில் போட்டும் பிசைந்து சாப்பிடலாம்.

உங்களுக்கு பஞ்சாப் ஸ்டைல் பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாப் பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைக்க:
- ¼ கப் துருவிய தேங்காய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 தக்காளி நறுக்கியது
- 4 வர மிளகாய்
- 1 கப் புளிக்கரைசல்
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- ½ டீஸ்பூன் வெல்லம்
தாளிக்க:
- 3 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- அரை கப் பூண்டு(நறுக்கியது)
செய்முறை:
- முதலில், ஒரு கடாயில் 4 ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடாக்கி, 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்னர் அதில் நறுக்கிய அரை கப் பூண்டு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
- பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கி அதை தனியாக எடுத்து வைக்கவும்.
- மசாலா விழுது தயாரிக்க, ஒரு மிக்ஸி ஜாரில் ¼ கப் தேங்காய், 1 டீஸ்பூன் கடுகு, 1 தக்காளி மற்றும் 4 வர மிளகாயை எடுத்துக் கொள்ளவும்.
- தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
- ஒரு பெரிய கடாயில் 1 கப் புளிக்கரைசல், ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள், ¾ டீஸ்பூன் உப்பு மற்றும் ½ டீஸ்பூன் வெல்லத்தை எடுத்துக் கொள்ளவும்.
- நன்றாகக் கலந்து, 5 நிமிடங்கள் அல்லது அதன் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- தயார் செய்த மசாலா விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் வறுத்த பூண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பின் எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
- அவ்வளவுதான் பஞ்சாபி ஸ்டைல் பூண்டு தொக்கு ரெடி. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications