Latest Updates
-
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன?
புளிச்சக்கீரை பருப்பு கடையல் - இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Pulicha Keerai Paruppu Kadayal Recipe In Tamil: வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்ப்பது நல்லது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கீரை சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை கீரை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் புளிச்சக்கீரையை வாங்கி வந்து, பருப்பு சேர்த்து கடைந்து கொடுங்கள்.
இப்படி புளிச்சக்கீரையை கடைந்து கொடுக்கும் போது, அது மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதில் உள்ள முழு சத்துக்களும் கிடைக்கும். முக்கியமாக இந்த பக்குவத்தில் புளிச்சக்கீரையை செய்தால், பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் சூடான சாதத்துடன் புளிச்சக்கீரை பருப்பு கடையலை சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிடும் போது, சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு புளிச்சக்கீரை பருப்பு கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளிச்சக்கீரை பருப்பு கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளிச்சக்கீரை - 1 கட்டு
* துவரம் பருப்பு - 1 கப் (1 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
* தண்ணீர் - 3 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* பூண்டு - 4 பல்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 2 முறை கழுவி விட்டு, பின் அதில்
நீரை ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை எடுத்து, அதில் ஊற வைத்த துவரம் பருப்பை சேர்த்து,
3 கப் நீரை ஊற்றி, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை
சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து, அதோடு பச்சை
மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில்
வைத்து, 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து,
அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளிக்கரைசலை சேர்த்து கிளறி, மிதமான
தீயில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு, வரமிளகாய், பெருங்காயத் தூள், பொடியாக
நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் குக்கரில் இருக்கும் புளிச்சக்கீரையை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான புளிச்சக்கீரை பருப்பு கடையல் தயார்.



Click it and Unblock the Notifications











