Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
புளியும், வரமிளகாயும் இருந்தா போதும்... 5 நிமிடத்தில் இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி செய்யலாம்..
Tamarind Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? 5 நிமிடத்தில் ஒரு சுவையான சட்னியை செய்ய வேண்டுமா?
அப்படியானால் புளி மற்றும் வரமிளகாய் கொண்டு சுவையான சட்னியை செய்யுங்கள். இந்த புளி சட்னி புளிப்பு, இனிப்பு, காரம் என அனைத்து சுவையும் கலந்திருப்பதால், இட்லியுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சட்னி 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு புளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 5-6
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* சுடுநீர்
* சின்ன வெங்காயம் - 25
* பூண்டு - 15 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வரமிளகாய் மற்றும் புளியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு
பற்களை சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த வெங்காய பூண்டு விழுதை சேர்த்து மிதமான
தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த புளியை சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய் பிரியும்
வரை வதக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான புளி
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications