Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
2 கப் பொரி இருந்தா ஒருடைம் இந்த மாதிரி தோசை சுட்டு சாப்பிடுங்க.. ருசி செமயா இருக்கும்...
Pori Dosa Recipe In Tamil: காலை வேளையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை தான் செய்வீர்களா? ஆனால் தோசை சுட மாவு இல்லையா? இப்படி தோசை மாவு இல்லாத சமயத்தில் தோசை சாப்பிட நினைத்தால், உங்கள் வீட்டில் பொரி அதிகம் இருந்தால், அதைக் கொண்டு 15 நிமிடம் தோசை மாவை தயார் செய்யலாம்.
பொரி கொண்டு செய்யப்படும் தோசையானது மிகவும் சுவையாக இருப்பதோடு, அவசர நேரத்தில் டக்கென்று செய்யகூடிய வகையில் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பொரி தோசை வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்ற ரெசிபி. முக்கியமாக இந்த தோசை சுடுவதற்கு பொரியுடன் கோதுமை மாவும், தயிரும் இருந்தாலே போதுமானது. இந்த பொரி தோசையை தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு பொரி தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொரி - 2 கப்
* கோதுமை மாவு - 1/2 கப்
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பொரியை ஒரு பாத்திரத்தில் பொரியை எடுத்து அதில் நீரை
ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து பொரியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, ஊற வைத்த
பொரியை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1/2 கப் கோதுமை மாவு மற்றும் 1/2 கப் தயிர் சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவைக் கொண்டு மெல்லியதாக தோசை ஊற்றி, மேலே சிறிது எண்ணெய்
உற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான பொரி தோசை
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications
