Latest Updates
-
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும்
2 தக்காளியும், 1 கப் புதினாவும் இருந்தா இந்த சட்னியை அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்...!
Pudina Thakkali Chutney Recipe in Tamil: வீட்டில் டிபன் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது இட்லி, தோசைதான். இட்லி, தோசைக்கு பொதுவாக அனைத்து வீடுகளிலும் அரைக்கப்படும் சைடு டிஷ் தேங்காய் மற்றும் தக்காளி சட்னிதான். ஹோட்டல்களில் சாப்பிடும் போது மட்டுமே கொத்தமல்லி அல்லது புதினா போன்ற சட்னிகளை சாப்பிட முடியும். ஏனெனில் இந்த சட்னிகளை அரைக்கத் தேவைப்படும் நேரமும், பொருட்களும் மற்ற சட்னிகளை விட அதிகமாகும்.
ஆனால் இந்த சட்னிகளில் மற்ற சட்னிகளை விட சுவையும், ஆரோக்கிய நன்மைகளும் அதிகம். புதினா, பூண்டு, மிளகாய் போன்றவை மூலப்பொருட்களாக இருக்கும் இந்த சட்னி இட்லி மற்றும் தோசைக்கு சிறந்த சைடிஷாக இருக்கும். குறிப்பாக புதினாவுடன் சில பொருட்களை சேர்த்து அரைக்கும் போது அதன் சுவை பலமடங்கு அதிகரிக்கும். வழக்கமான புதினா சட்னியுடன் தக்காளி மற்றும் சில பொருட்களை சேர்த்து அரைக்கும் போது அதன் சுவை வித்தியாசமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி புதினா சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பெரிய தக்காளி - 2
- சின்ன வெங்காயம் - 10
- பச்சை மிளகாய் - 2
- புதினா - 1 கப்
- வர மிளகாய் - 3
- உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- புளி - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- வர மிளகாய் - 1
- உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
செய்முறை:
- வெங்காயம் மற்றும் தக்காளியைத் தோராயமாக நறுக்கி தனியாக வைக்கவும். பின்னர் புதினா இலைகளைப் பறித்து தண்ணீரில் மண் இல்லாமல் நன்றாக அலசிக் கொள்ளவும்.
- ஒரு கடாயை சூடாக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெயைச் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து, பருப்பு பொன்னிறமாகி வாசனை வரும் வரை வறுக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்கு குழையும் வரை வதக்கவும்.
- தக்காளி ஏற்கெனவே புளிப்புத்தன்மை கொண்டிருப்பதால் மிகவும் குறைவான அளவு புளியை சேர்க்கவும்.
- பின்னர் புதினா இலைகளைச் சேர்த்து, வெங்காயம் தக்காளி கலவையுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
- கடைசியாக துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு கலந்து, இதை குறைந்த தீயில் சுமார் 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
- இந்த அனைத்துப் பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொண்டு ஆற விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஆறிய பிறகு, தண்ணீர் சேர்க்காமல் இதை ஒரு மென்மையான விழுதாக அரைக்கவும்.
- - சட்னியை தாளிக்க ஒரு கரண்டியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- பின்னர் கடுகு சேர்த்து, அது வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் வர மிளகாய் மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- வர மிளகாய் மற்றும் உளுந்தம் பருப்பு நிறம் மாறியதும் அதை சட்னி மீது கொட்டி நன்கு கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான தக்காளி புதினா சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
