Just In
- 11 min ago
சாமை கட்லெட்
- 1 hr ago
உங்களுக்கு வயசாகாம எப்பவும் இளமையா ஜொலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 1 hr ago
ராசிப்படி கிருஷ்ணருக்கு எந்த பொருளை படைத்தால், அவரின் முழு அருள் கிடைக்கும் தெரியுமா?
- 1 hr ago
உங்கள் மூட்டுகளில் இந்த பிரச்சினை இருக்கா? அப்ப உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
Don't Miss
- Finance
எல்ஐசி பங்கு விலை 22% வரை அதிகரிக்கலாம்.. எப்போது.. இது சரியான வாய்ப்பு தான்?
- Movies
பார்சிலோனாவில் விக்கி -நயன் ரொமான்ஸ்.. இவங்க அலப்பறைக்கு அளவே இல்லாம போய்க்கிட்டு இருக்கே!
- News
அரசுப் பேருந்துகளில் பணமில்லா பரிவரித்தனை..டிஜிட்டல் டிக்கெட் - அசத்தல் அறிவிப்பு
- Sports
2 வீரர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி.. ஜிம்பாப்வே தொடரில் கூடுதல் பொறுப்பு.. என்ன காரணம் தெரியுமா
- Technology
Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?
- Automobiles
எந்த பிரச்சனையும் இல்லை.. நடுவானிலேயே விமானிகள் அசந்து தூங்குவார்கள்... ஆனால் ஒன்று மட்டும் முக்கியம்...
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
புதினா துவையல்
புதினா உடலுக்கு மிகவும் நல்லது. அடிக்கடி புதினாவை உணவில் சேர்த்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். உங்கள் வீட்டில் புதினா உள்ளதா? இன்று இரவு இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் புதினாவைக் கொண்டு துவையல் செய்யுங்கள். இந்த புதினா துவையல் செய்வதற்கு ஈஸியாகவும், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாகவும் இருக்கும். குறிப்பாக இந்த துவையல் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும்.
உங்களுக்கு புதினா துவையல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புதினா - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* தேங்காய் - 1/2 கப்
* பூண்டு - 1 பல்
* புளி - 1 சிறிய துண்டு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் புளியைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து 3-4 முறை வறுக்க வேண்டும்.
* பின் அதில் புதினா இலைகளை சேர்த்து சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளியை சேர்த்து நன்கு கிளறி, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை தெளித்து கெட்டியாக அரைத்தால், புதினா துவையல் தயார்.
Image Courtesy: yummytummyaarthi