Latest Updates
-
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி பருப்பு கறி செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Pudalangai Paruppu Kulambu Recipe in Tamil: ஆரோக்கியமாக வாழ்வதற்கு நம் உணவுகளில் காய்கறிகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் புடலங்காய் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான காய்கறிகளில் ஒன்றாகும். இதுவரை நீங்கள் புடலங்காயைக் கொண்டு குழம்பு, பொரியல் என்று தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த புடலங்காயை வைத்து ஒரு சூப்பரான குழம்பு செய்யலாம். உண்மைதான், புடலங்காயை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் ஒரு சூப்பரான பருப்புக் குழம்பு செய்யலாம். இந்த புடலங்காய் பருப்புக் குழம்பு சாதத்தில் ஊற்றி சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளவர்கள் புடலங்காயை விரும்பி சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு புடலங்காய் இந்த மாதிரி பருப்புக் குழம்பு செய்து கொடுங்கள். இது நிச்சயம் அவர்கள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இந்த புடலங்காய் பருப்புக் குழம்பின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் சில பொருட்கள்தான்.
உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் புடலங்காய் பருப்புக் குழம்பை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு புடலங்காய் பருப்புக் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- துவரம்பருப்பு - 1/4 கப்
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- புடலங்காய் - 1 (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2
- பெரிய வெங்காயம் - 1 (தோராயமாக நறுக்கியது)
- இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
- பூண்டுப் பல் - 5
- தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- எண்ணெய் - 1/4 ஸ்பூன்
- கொத்தமல்லி -சிறிதளவு
தாளிக்க:
- நெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- வர மிளகாய் - 1
செய்முறை:
- பருப்புகளை நன்றாகக் கழுவி, 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சியை கழுவிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புடலங்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும். இவற்றைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில், ஊறவைத்த துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, நறுக்கிய புடலங்காய், வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டுப் பற்கள், மஞ்சள் தூள், பெருங்காயம், தேவையான அளவு உப்பு, சில துளிகள் சமையல் எண்ணெய் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
- நன்றாகக் கலந்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து இரண்டு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
- பிரஷர் வெளியேறிய பிறகு குக்கரைத் திறந்து பருப்பய் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- இதை தாளிக்க ஒரு கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளித்து, வேகவைத்த பருப்புடன் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, கெட்டியாகும் வரை சில நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். அவ்வளவுதான் சூப்பரான புடலங்காய் பருப்பு குழம்பு ரெடி.
- இதை சூடான சாதத்தில் ஊற்றி நெய்யுடன் சேர்த்து சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications