Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
புடலங்காயை வைச்சு பொரியல் செய்யாம இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...!
Pudalangai Chutney Recipe in Tamil: காய்கறிகளை வைத்து பொதுவாக குழம்பும், பொரியலும்தான் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அவற்றை வைத்து சட்னியும் செய்யலாம். இந்த காய்கறி சட்னி இட்லி, தோசை மட்டுமின்றி உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? பொதுவாக வீட்டில் புடலங்காய் இருந்தால், அதை வைத்து பொரியல், கூட்டு தான் செய்வோம். ஆனால் புடலங்காயை வைத்து சட்னி அரைத்து எப்படிஇ இருக்கும்? அது சுவையாகவா இருக்கும்? என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மையில் இந்த புடலங்காய் சட்னியை ஒருமுறை செய்து பாருங்கள், இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த சட்னியை செய்தால், இனிமேல் புடலங்காயை வாங்கினால் இந்த சட்னியை தான் செய்வீர்கள். அந்த அளவிற்கு சட்னி வேற லெவலில் இருக்கும். இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும். இந்த புடலங்காய் சட்னி செய்வதற்கு எளிதானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும், சுவையானதும் கூட. எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த சட்னி சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பதிவில் சுவையான புடலங்காய் சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 சிறிய புடலங்காய்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 3 காஷ்மீரி மிளகாய்
- ¾ கப் துருவிய தேங்காய்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவைக்கு ஏற்ப
- 1 சிறிய துண்டு புளி
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1 வர மிளகாய்
- பெருங்காயம் சிறிதளவு
செய்முறை:
- முதலில் புடலங்காயை நீளவாக்கில் நறுக்கவும். பின்னர் விதைகளை நீக்கி குத்து மதிப்பாக நறுக்கவும்.
- பின்னர் மேலும், ஒரு பெரிய வாணலியில் எண்ணெயை சூடாக்கவும். உளுத்தம்பருப்பு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும். உளுத்தம்பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய புடலங்காயைச் சேர்க்கவும். அவை பாதியாக சுருங்கும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் துருவிய தேங்காய், உப்பு, மஞ்சள் மற்றும் ஒரு சிறிய உருண்டை புளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் முழுமையாக ஆற விடவும்.
- பின்னர் இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி, தேவையான தண்ணீர் சேர்த்து கரடுமுரடான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைக்கவும்.
- ஒரு சிறிய கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டு தாளித்து அதனை சட்னி மீது கொட்டி கிளறவும்.
- சூப்பரான புடலங்காய் சட்னி ரெடி. இது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
- உங்கள் கூடுதல் சுவை தேவைப்பட்டால் புடலங்காயுடன் ஒரு தக்காளி சேர்த்து வதக்கி சட்னி அரைக்கவும்.



Click it and Unblock the Notifications
