Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
சப்பாத்தி, பூரிக்கு ஒருமுறை உருளைக்கிழங்கு தக்காளி கிரேவியை செஞ்சு பாருங்க.. டேஸ்ட்டா இருக்கும்..
Potato Tomato Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யும் திட்டம் உள்ளதா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? இன்று சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட, அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், தக்காளியும் உள்ளதா? அப்படியானால் அவ்விரண்டையும் கொண்டு உருளைக்கிழங்கு தக்காளி கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, பூரியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு தக்காளி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு தக்காளி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 3 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பெரிய உருளைக்கிழங்கு - 3
* தண்ணீர் - தேவையான அளவு
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, கிழங்கு மூழ்கும்
அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலுரித்து,
மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள் சேர்த்து, அத்துடன் தக்காளி மற்றும் பச்சை
மிளகாய் சேர்த்து 5-8 நிமிடம் தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூளை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் சர்க்கரை சேர்த்து, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை
சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க
வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான உருளைக்கிழங்கு
தக்காளி கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
