Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
உருளைக்கிழங்கு வாங்குனா இந்த மாதிரி சுக்கா செஞ்சு சாப்பிடுங்க... சிக்கன் சுக்காவை விட சூப்பரா இருக்கும்...!
Potato sukka recipe in Tamil: சில காய்கறிகள் அனைவருக்குமே மிகவும் பிடித்தவையாக இருக்கும். அதில் முக்கியமானது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை பொரியல் செய்தாலும் சரி, குழம்பு வைத்தாலும் சரி வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கனைப் போலவே உருளைக்கிழங்கையும் பல வழிகளில் சமைக்கலாம். அப்படி ஒரு தனித்துவமான உருளைக்கிழங்கு ரெசிபிதான் உருளைக்கிழங்கு சுக்கா.
இந்த உருளைக்கிழங்கு சுக்கா சாப்பிடுவதற்கு சிக்கன் சுக்கா மாதிரியே இருக்கும். புரட்டாசி மாதம் வரப்போறதால இந்த ரெசிபியை தெரிந்து வ வைத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சூப்பரான உருளைக்கிழங்கு சுக்காவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- உருளைக் கிழங்கு - 3
- பச்சைப் பட்டாணி - 2 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- பூண்டு - 2 பல்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- கறிமசாலா தூள் - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- கொத்துமல்லி இலை - ஒரு கைப்பிடி
- எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
- கடலை மாவு - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - ஒரு ஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- சீரகம் - அரை ஸ்பூன்
- உளுந்து - அரை ஸ்பூன்
- கடலைப் பருப்பு - அரை ஸ்பூன்
- முந்திரி - 5
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- வர மிளகாய் - 1
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் இப்போது பட்டாணியை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதேபோல உருளைக் கிழங்கையும் வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு ஆறியதும் உருளைக்கிழங்கை கைகளால் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் இஞ்சி மற்றும் பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை, சீரகம், பிரியாணி இலை போட்டு வதக்கவும். அதன்பின் உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு மற்றும் வரமிளகாயை போட்டு வதக்கவும்.
- பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும். பிறகு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் அடுத்து தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு குலைந்ததும் மஞ்சள்தூள், கறிமசாலா மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் உருளைக் கிழங்கு,பட்டாணி சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீர்,உப்பு சேர்த்து மிதமானத் தீயில் கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
- கொதி வந்ததும் 1 ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை எடுத்து சிறிது நீர் விட்டுக் கரைத்து மசாலாவில் ஊற்றினால் கிழங்கு தனித்தனியாக இல்லாமல் எல்லாம் ஒன்றாகக் கலந்திருக்கும்.
- நன்றாகக் கிளறி விட்டு எலுமிச்சை சாறு விட்டு,கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு சுக்கா ரெடி!



Click it and Unblock the Notifications











