Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும்
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
Crispy Potato Roll Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் உங்கள் பிள்ளைகளின் பசியை போக்கும் வகையில் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் வித்தியாசமான சுவையில் ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த உருளைக்கிழங்கை கொண்டு மொறுமொறுவென்று சுவையாக இருக்கும் ரோலை செய்து கொடுங்கள். இந்த உருளைக்கிழங்கு ரோல் செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு ரோலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு ரோல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மேல் மாவிற்கு...
* மைதா - 1 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
* வேக வைத்த பெரிய உருளைக்கிழங்கு - 2
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, ஓமம், சுவைக்கேற்ப
உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கைகளால் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு
பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை மூடி வைத்து 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த 2 உருளைக்கிழங்கை நன்கு
மசித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்,
கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி ரோல்
போன்று செய்து, ஒரு தட்டில் வைத்து கொள்ள வேண்டும்.
* பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை சற்று அதிகமாக எடுத்து, சதுரமாக
தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் கத்தியால் மூன்று பாகங்களாக வெட்டி, ஒரு பாகத்தில் ஒரு துண்டு
உருளைக்கிழங்கை வைத்து, ரோல் போன்று நன்கு உருட்டிக் கொள்ள வேண்டும்.
இதே போன்று மாவு மற்றும் உருளைக்கிழங்கு கலவையை கொண்டு ரோல் செய்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3-4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு, மிதமான
தீயில் வைத்து, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான
உருளைக்கிழங்கு ரோல் தயார்.



Click it and Unblock the Notifications
