Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
வீட்டுல உருளைக்கிழங்கும், பட்டாணியும் இருக்கா? இப்படி குருமா செய்யுங்க.. செமயா இருக்கும்..
Potato Peas Kurma Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் பூரி அல்லது சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், பச்சை பட்டாணியும் இருக்கா?
அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் குருமாவை செய்யுங்கள். இந்த உருளைக்கிழங்கு பட்டாணி குருமா பூரி, சப்பாத்திக்கு மட்டுமின்றி, அப்பம், இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

முக்கியமாக இந்த குருமா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு உருளைக்கிழங்கு பட்டாணி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே உருளைக்கிழங்கு பட்டாணி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை பட்டாணி - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி, சோம்பு
சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சோம்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூளை சேர்த்து, துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கு
மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் உருளைக்கிழங்கு மூழ்கும் வரை நீரை ஊற்றி கொதிக்க வைத்து,
குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள
தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, மீண்டும் குக்கரை
அடுப்பில் வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
