Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
உருளைக்கிழங்கு வெச்சு புதுமையான சுவையில் இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்...
Potato Paneer Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு பெரும்பாலும் உருளைக்கிழங்கு மசாலா அல்லது கிரேவி தான் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் உருளைக்கிழங்கு கிரேவி செய்வீர்களா?
அப்படியானால் உருளைக்கிழங்குடன் பன்னீர் இருந்தால், அவற்றைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த உருளைக்கிழங்கு பன்னீர் கிரேவி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, சப்பாத்தி, நாண், பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* தக்காளி - 4
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* முந்திரி - 15 ( சுடுநீரில் ஊற வைத்தது)
* பன்னீர் - 100 கிராம்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - சிறிது
* தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக
வெட்டி, நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக்கிய உருளைக்கிழங்கை எடுத்து,
அத்துடன் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு
சேர்த்து நன்கு பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தக்காளி, பூண்டு, இஞ்சி, ஊற வைத்த முந்திரி
மற்றும் 100 கிராம் பன்னீரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மிதமான தீயில்
வைத்து, நன்கு ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, மிளகு, ஏலக்காய், சீரகம்,
பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு
கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து கிளறி, மல்லித் தூள், மிளகாய் தூள், கரம்
மசாலா, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, பச்சை
வாசனை போக 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக ப்ரை செய்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளை சேர்த்து கிளறி,
5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,
சுவையான உருளைக்கிழங்கு பன்னீர் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications