Latest Updates
-
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும்
உருளைக்கிழங்கை வைச்சு இந்த மசியலை ஒருதடவை செஞ்சு பாருங்க... சாம்பார் சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...!
Potato Masiyal Recipe in Tamil: உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதை எந்த வடிவில் எப்படி செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். இது குழந்தைகளுக்கு மட்டும் இன்றி பெரியவர்களுக்கும் பிடித்த ஒன்று. இதை வைத்து பல சுவையான உணவுகளை செய்திருப்பீர்கள். ஒரு முறை இந்த உருளைக்கிழங்கு தக்காளி மசியல் செய்து பாருங்கள். வாங்க எப்படி உருளை கிழங்கு தக்காளி மசியல் எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு - 4
- தக்காளி - 2
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - சிறியது(ஒரு இன்ச் அளவு)
- பூண்டு - 12 அல்லது 15 பல்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
- தனியா தூள் - 2 டீ ஸ்பூன்
- பெருங்காய தூள் - ¼ டீ ஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
- உருளை கிழங்கை மண் இல்லாமல் அலசி தோல் சீவி நறுக்கி உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் கழுவி தோல் சீவி நறுக்கி கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய இஞ்சி மற்றும் தோல் உரித்த பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- பச்சை மிளகாயை உரலில் சேர்த்து இடித்தோ அல்லது மிக்ஸியில் சேர்த்து ஒன்று இரண்டாகவோ அரைத்து கொள்ளவும்.
- நன்கு பழுத்த இரண்டு தக்காளியை எடுத்து ஒன்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். இன்னொன்றை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதில் இடித்து வைத்த பச்சை மிளகாயை சேர்த்து கிளறவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய தக்காளி நன்கு மசிந்து வரும் வரை வதக்கவும்.
- பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மல்லித்தூள், சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- மசாலா வதங்கியதும் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறி நன்கு வதக்கவும்.
- பின் அதனுடன் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
- குக்கரை மூடி வைத்து 4 விசில் விட்டு வேக வைக்கவும்.
- விசில் அடங்கியதும் குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து கரம் மசாலா மற்றும் பெருங்காய தூள் சேர்த்து கிளறவும்.
- கடைசியாக சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு தக்காளி மசியல் தயார்!



Click it and Unblock the Notifications