Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மொறுமொறுப்பான... உருளைக்கிழங்கு லாலிபாப்
உருளைக்கிழங்கு லாலிபாப் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது மழைக்காலத்தின் மாலை வேளையில் செய்து சாப்பிட ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு இன்று மாலை உருளைக்கிழங்கு லாலிபாப் செய்து கொடுங்கள். உருளைக்கிழங்கு லாலிபாப் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது மழைக்காலத்தின் மாலை வேளையில் செய்து சாப்பிட ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ்.

இப்போது அந்த உருளைக்கிழங்கு லாலிபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று மறக்காமல் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மைதா - 1 டேபிள் ஸ்பூன்
* பிரட் தூள் - 1 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பிரட்டுவதற்கு...
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சிறிது
* பிரட் தூள் - 1/4 கப்
* டூத் பிக்ஸ்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் வேக வைத்து துருவிய உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், சாட் மசாலா, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, 1 டேபிள் ஸ்பூன் மைதா, 1 கப் பிரட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு சிறிய பௌலில் மைதா, உப்பு மற்றும் சிறிது நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் ஒரு தட்டில் பிரட் தூளை போட்டுக் கொள்ளுங்கள்.
* அதன் பின் உருட்டி வைத்துள்ள உருண்டையை மைதாவில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
* எண்ணெய் சூடானதும், உருட்டி வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
* இறுதியில் டூத் பிக்கை ஒவ்வொரு உருண்டையிலும் சொருகினால், உருளைக்கிழங்கு லாலிபாப் தயார்.



Click it and Unblock the Notifications