Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உருளைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குருமா செய்யுங்க... சிக்கன் குருமா மாதிரியே இருக்கும்...!
Potato Kurma Recipe in Tamil: உங்கள் வீட்டில் இருப்பவர்கள் உருளைக்கிழங்கு பிரியர்களா? உருளைக்கிழங்கை அடிக்கடி உங்கள் வீட்டில் சமைப்பீர்களா? மதிய வேளையில் நீண்ட நேரம் சமையலறையில் இருக்க பிடிக்கலையா? அப்படியானால் இந்த ஈஸியான உருளைக்கிழங்கு குருமாவை டக்குனு செய்யுங்க. சிக்கன் குருமா ஸ்டைலில் இருக்கும் இந்த உருளைக்கிழங்கு குருமா புரட்டாசி மாதத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் வீட்டில் தக்காளியும், உருளைக்கிழங்கும் இருந்தால்,அருமையான குருமா செய்யலாம். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த அட்டகாசமான உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி உருளைக்கிழங்கு குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- உருளைக் கிழங்கு - கால் கிலோ
- தக்காளி - 3
- தேங்காய் - அரை மூடி
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- பொட்டுக்கடலை - 1/2 ஸ்பூன்
- பட்டை - 2
- கிராம்பு - 2
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- கசகசா - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 1 கொத்து
- மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
- மல்லித்தூள் - ஒன்றரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- கொத்துமல்லி தழை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- உருளைக்கிழங்கை முதலில் தனியே வேகவைத்துக் கொள்ளவும்.
- அடுத்து சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளிக்கவும்.
- அடுத்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பிறகு தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- தக்காளி நன்கு வெந்ததும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பச்சை வாசனை போனதும் அதில் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து, பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.
- பின்னர் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து மல்லித்தூள் வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- பிறகு தேங்காய், சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக அரைத்து, அடுப்பில் உள்ள உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும், கொத்துமல்லி தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
- சூப்பரான உருளைக்கிழங்கு குருமா ரெடி. இது இட்லி, தோசையுடன் சாப்படவும் அருமையாக இருக்கும், சாதத்தில் ஊற்றி சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications