Latest Updates
-
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
3 உருளைக்கிழங்கும், 1 குடைமிளகாயும் இருந்தா.. இப்படி ஒரு சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
Potato Capsicum Masala Recipe In Tamil: இரவு நேரத்தில் உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? ஒவ்வொரு முறை சப்பாத்தி செய்யும் போதும், அதன் சைடு டிஷ்ஷை முடிவெடுப்பது ஒரு பெரிய வேலையாக உள்ளதா? இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்வதாக இருந்தால், உருளைக்கிழங்கும் குடைமிளகாயும் வீட்டில் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சைடு டிஷ் செய்யுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு குடைமிளகாய் மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவை அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சைடு டிஷ்ஷை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். பேச்சுலர்கள் கூட இந்த சைடு டிஷ்ஷை ட்ரை செய்யலாம். அந்த அளவில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு குடைமிளகாய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு குடைமிளகாய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தயிர் மசாலாவிற்கு...
* தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* கசூரி மேத்தி - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (அரைத்தது)
* தண்ணீர் - 1/4 கப் + 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
காய்கறிகளை வதக்குவதற்கு...
* வெண்ணெய் - 2 ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்
தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், உப்பு, கசூரி மேத்தி
ஆகியவற்றை எடுத்து நன்கு கலந்து விட வேண்டும்.
* மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது நீரை ஊற்றி கலந்து,
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு
விழுதை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தயிர் மசாலாவை சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி
மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அடுப்பில் இருந்து இறக்கி
விட வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் வெண்ணெய்
சேர்த்து உருகியதும், நீளவாக்கில் வெட்டிய வெங்காயத்தை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் வெட்டிய குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அதன் பின் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து 3
நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
* பின்பு வதக்கிய காய்கறிகளை மசாலாவுடன் சேர்த்து கிளறி, மீண்டும்
அடுப்பில் வைத்து, 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 3 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* 3 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு குடைமிளகாய் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications