Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
மணமணக்கும்... பொரிச்ச ரசம் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. அள்ளும்..
Poricha Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியரா? தினமும் உங்கள் வீட்டில் ரசம் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான ரசம் வைத்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான ரசம் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருமுறை பொரிச்ச ரசம் செய்யுங்கள். இந்த ரசத்திற்கு புளித்தண்ணீர், பருப்பு தண்ணீர் என்று எதுவுமே தேவையில்லை.
இந்த ரசத்தின் ஸ்பெஷலே, அதற்கு தனித்துவமான சுவையைத் தரும் வகையில் ஒரு பொடியை வறுத்து அரைத்து சேர்ப்பது தான். மேலும் இந்த ரசத்திற்கு புளிப்பு சுவைக்காக தக்காளி அதிகம் சேர்க்கப்படும். இந்த ரசத்தை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி இந்த ரசத்தை செய்து கொடுக்க சொல்லிக் கேட்பார்கள்.

உங்களுக்கு பொரிச்ச ரசம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரிச்ச ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* துவரம் பருப்பு- 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* குண்டு வரமிளகாய் - 10
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* தக்காளி - 4 (அரைத்துக் கொள்ளவும்)
* தண்ணீர் - 1 1/2 டம்ளர் + 300 மிலி
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து
அரைப்பதற்கு 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு,
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து நன்கு வறுத்து
இறக்கி, 1 கைப்பிடி துருவிய தேங்காயை சேர்த்து, வாணலி சூட்டில்
அப்படியே வறுக்க வேண்டும்.
* பின்பு அதை அப்படியே தனியாக வைத்து குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் தக்காளிகளை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, அரைத்த தக்காளியை
சேர்த்து அத்துடன் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, உயர் தீயில்
வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் மூடி வைத்து மிதமான தீயில் 10
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, மிளகுத் தூள் 1/2 டீஸ்பூன்
சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, 300
மிலி நீரை ஊற்றி கலந்து விட வேண்டும்.
* ஒரு கொதி வந்ததும், அதில் விருப்பமிருந்தால் நாட்டுச்சர்க்கரை
சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லியைத் தூள், 1
டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி ஒரு தட்டு கொண்டு மூடினால், சுவையான பொரிச்ச
ரசம் தயார்.



Click it and Unblock the Notifications











