Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
பூஜைக்கு வாங்குன பொரி இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க... செம டேஸ்ட்டா இருக்கும்...
Pori Idli Recipe In Tamil: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு வாங்குன பொரி அதிகம் உள்ளதா? அந்த பொரியை எப்படி காலி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு மசாலா பொரி செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அந்த பொரியைக் கொண்டு அற்புதமான டிபனை செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் 2 கப் பொரியும், 1 கப் ரவையும் இருந்தால், பஞ்சு போன்ற மென்மையான இட்லியை செய்து சாப்பிடலாம். இந்த பொரி இட்லி வழக்கமாக சாப்பிடும் இட்லியின் சுவையை விட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். இந்த இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று அனைத்துவிதமான சட்னியும் பொருத்தமாக இருக்கும்.

உங்களுக்கு பொரி இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொரி - 2 கப்
* ரவை - 1 கப்
* புளிப்பில்லாத தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப் + 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் 2 கப் பொரியை எடுத்து, அதில் தேவையான
அளவு நீரை சேர்த்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, நீரில் இருந்து பொரியை எடுத்து, மிக்சர் ஜாரில்
போட்டு, 1/2 கப் நீரை எடுத்து ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவையை சேர்த்து, மிதமான
தீயில் வைத்து 2-3 நிமிடம் நன்கு வறுத்து இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அந்த ரவையை அரைத்த பொரியுடன் சேர்த்து, அத்துடன் தயிரையும்
சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து, 10 நிமிடம்
மூடி வைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நீரை
ஊற்றி நன்கு கலந்து, சமையல் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு இட்லி தட்டை எடுத்து, அதன் குழிகளில் எண்ணெய் தடவி, கலந்து
வைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்ற வேண்டும்.
* பின் இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டை வைத்து, 10 நிமிடம் வேக
வைத்து எடுத்தால், பஞ்சு போன்ற பொரி இட்லி தயார்.



Click it and Unblock the Notifications