Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இதுவரை எத்தனையோ தோசை சுட்டுருப்பீங்க.. பூசணிக்காய் தோசை சுட்டுருக்கீங்களா? இன்னிக்கு ட்ரை பண்ணுங்க..
Poosanikai Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தோசை செய்வீர்களா? ஆனால் மாவு தீர்ந்துவிட்டதா? இந்நிலையில் சட்டென்று ஒரு டிபனை செய்ய நினைத்தால், வீட்டில் வெள்ளை பூசணிக்காய் இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் தோசை செய்யுங்கள். இந்த தோசை இதுவரை நீங்கள் செய்திராத வகையில் ஒரு அற்புதமான டிபனாக இருக்கும்.
அதுவும் இந்த பூசணிக்காய் தோசையை, காலையில் செய்து, பாலக் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டாவ் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த பாலக் சட்னி இட்லி, தோசை என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடுமாறு அருமையாக இருக்கும்.

உங்களுக்கு பூசணிக்காய் தோசை மற்றும் பாலக் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூசணிக்காய் தோசை மற்றும் பாலக் சட்னி ரெசிபியின் என்ற செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூசணிக்காய் - 2 பெரிய துண்டுகள்
* ரவை - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 2 டீஸ்பூன்
* மிளகு - 2 டீஸ்பூன் (ஒன்றிரண்டாக தட்டியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
பாலக் சட்னிக்கு...
* பெரிய பாலக் கீரையின் இலை - 15
* பொட்டுக்கடலை - 75 கிராம்
* துருவிய தேங்காய் - 1 கப்
* பச்சை மிளகாய் - 5
* பூண்டு - 4 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* சிறிய தக்காளி - 1
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் பூசணிக்காயை விதைகளுடன் துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் அவற்றை மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன் 1 கப் ரவை, 1/4 கப்
தண்ணீரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியை
சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சீரகம், தட்டி வைத்துள்ள மிளகு, பொடியாக நறுக்கிய
கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதை மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான பூசணிக்காய் தோசை
தயார்.
* அதன் பின் சட்னிக்கு பசலைக்கீரையை சிறிது நீரில் போட்டு 5 நிமிடம்
வேக வைத்து எடுத்துக் குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பாலக்கீரையை போட்டு, அத்துடன் பொட்டுக்கடலை,
துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு பற்கள், சுவைக்கேற்ப உப்பு,
சிறிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்
சுவையான பாலக் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications