Latest Updates
-
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்!
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
Poori Masala In Tamil: விடுமுறை நாட்களில் காலை வேளையில் பெரும்பாலும் பூரி தான் உங்கள் வீட்டு டிபனாக இருக்குமா? இந்த பூரி செய்தாலே அதற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு மசாலா தான் செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரியான சுவையில் தான் இந்த மசாலாவை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை இந்த பக்குவத்தில் உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்கள். இப்படி மசாலா செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகளவு பூரியை சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த பூரி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூரி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிறது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (மசித்தது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வெங்காயத்தின் நிறம் மாறி, பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிக்கன் மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்
தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து 2
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி, மூடி வைத்து வெங்காயம் மென்மையாகி மசாலாவின் பச்சை
வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை
சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வேக
வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பூரி மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications
