Latest Updates
-
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
10 பல் பூண்டு 1 கப் சாதம் இருந்தா போதும் சூப்பரான சாப்பாடு ரெடி.. இதை செஞ்சு எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!
Poondu Sadham Recipe in Tamil: தற்போது இருக்கும் காலநிலை மாற்றத்தால் ஏராளமானோர் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்வோம். இது போன்ற சூழலில் நாம் உணவில் செய்யும் ஆரோக்கிய மாறுதல்கள் நல்ல மாற்றத்தை தரும். பூண்டை நாம் உணவில் சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியமான பல நன்மைகளை தரும்.
இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி மற்றும் காய்ச்சலில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கி உடல் எடை குறைப்பிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம், மற்றும் எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றில் நல்ல பலனை தரும் ஆற்றலை கொண்டிருக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்த பதிவில் பூண்டை வைத்து எப்படி சாதம் செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- பூண்டு - 10 பல்
- சாதம் - 1 கப்
- வரமிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - 1 டேப்ளேஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
- சாதம் வேக வைக்கும் போது 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறுதளவு உப்பு
சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கும் போது சாதம் ஒன்றோடு
ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக வரும்.
- தோல் உரித்து வைத்த பூண்டை உரலில் சேர்த்து மசித்து கொள்ளவும்.
- உரல் இல்லாதவர்கள் மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக்
கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை
சேர்க்கவும்.
- அடுத்து அதனுடன் உளுந்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக
மாறும் வரை வறுக்கவும்.
- பூண்டு சேர்த்து நன்கு சிவக்கும் வரை வறுக்கவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- காரத்திற்கேற்ப வரமிளகாய் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து
நன்கு கிளறவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து அதனுடன் சாதம் சேர்த்து நன்கு
கிளறவும்.
- அதனுடன் மல்லி இலை மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை
அணைத்து விடவும்.
- சுவையான ஆரோக்கியமான பூண்டு சாதம் தயார்.



Click it and Unblock the Notifications
