Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
பூண்டு ஓம பொடி
மாலை வேளையில் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? ஆனால் பஜ்ஜி, போண்டா வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படியானால் பூண்டு ஓம பொடி செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? ஆனால் பஜ்ஜி, போண்டா வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படியானால் பூண்டு ஓம பொடி செய்து கொடுங்கள். பொதுவாக நீங்கள் கடைகளில் தான் ஓம பொடியை வாங்கி சுவைத்திருப்பீர்கள். ஆனால் அதை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். அதுவும் பூண்டு ப்ளேவர் இருக்கும் ஓம பொடியை சுலபமாக செய்யலாம். முக்கியமாக இது தீபாவளி பண்டிகையின் போதும் செய்யக்கூடியது.

உங்களுக்கு பூண்டு ஓம பொடி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு ஓம பொடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 6 பல்
* ஓமம் - 2 டீஸ்பூன்
* கடலை மாவு - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பூண்டு மற்றும் ஓமத்தைப் போட்டு சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த விழுதை வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி வைத்துள்ள சாற்றினை ஊற்றி, தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை இடியாப்பம் பிழியும் குழலில் போட்டு எண்ணெயில் நேரடியாக பிழிந்து, நன்கு வறுத்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் பிழிந்து எடுத்து குளிர வைத்து, பின் கையால் நொறுக்கி விட்டால், பூண்டு ஓம பொடி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications