Latest Updates
-
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்!
இட்லி, தோசைக்கு பூண்டு, கறிவேப்பிலை வெச்சு இப்படியொரு சட்னி செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்...
Poondu Karuveppilai Chutney: காலையில் இட்லி தோசைக்கு என்ன சட்னி செய்வதென் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கறிவேப்பிலையும், பூண்டும் அதிகமா இருக்கா? அப்ப இவ்விரு பொருட்களையும் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னி செய்யுங்கள்.
இந்த பூண்டு கறிவேப்பிலை சட்னி செய்வதற்கு சுவையாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சட்னி சத்தானதும் கூட. இந்த சட்னியை செய்தால் 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு பூண்டு கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கறிவேப்பிலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 10
* பூண்டு - 100 கிராம்
* கறிவேப்பிலை - 6 கொத்து
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து வறுத்து, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பூண்டு சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து சுருங்கும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் புளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, புளி
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வாணலியில் உள்ள அதிகப்படியான
எண்ணெய் ஊற்றி, தண்ணீர் எதுவும் ஊற்றாமல் சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான
எண்ணெய் ஊற்ற சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் ஊற்றி கிளறினால், சுவையான பூண்டு
கறிவேப்பிலை சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











