Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
இட்லிக்கு ஒருடைம் தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு சட்னியை செஞ்சு பாருங்க.. சுவை அள்ளும்...
Tanjore Special Garlic Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசனை செய்து கொண்டிக்கிறீர்களா? இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லையா? வீட்டில் பூண்டு உள்ளதா? அப்படியானால் அந்த பூண்டு கொண்டு தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு சட்னியை செய்யுங்கள்.
இந்த பூண்டு சட்னி செய்வதற்கு 4 பொருட்கள் இருந்தாலே போதுமானது. மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் டக்கென்று செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* வரமிளகாய் - 15
* முழு பூண்டு - 2
* தக்காளி - 3
* கல்உப்பு - 1 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், அதில் வரமிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து
நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் கல் உப்பையும் சேர்த்து,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, வதக்கிய
பொருட்களை நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, ஓரளவு
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை அதில் சேர்த்து 1 நிமிடம் நன்கு கிளறி
இறக்கினால், சுவையான தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு சட்னி தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications
