Just In
- 4 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 15 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 16 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
Don't Miss
- Finance
ரஷ்யாவின் ஒற்றை நடவடிக்கை.. 40 - 50 மில்லியன் மக்களை பசியில் ஆழ்த்தும்
- News
"என் மகனை கண் முன்னாடியே சுட்டு கொன்னுட்டாங்க!" கதறிய ஐஏஎஸ் அதிகாரி.. விஜிலென்ஸ் ரெய்டில் பரபரப்பு
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது??
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Pizza dosa recipe : பிட்சா தோசை
உங்கள் குழந்தைகள் அடிக்கடி பிட்சா கேட்கிறார்களா? பொதுவாக பிட்சா சுவையான உணவாக இருந்தாலும், ஆரோக்கியமற்றது. ஆனால் இந்த பிட்சாவை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்யலாம். அதுவும் தோசை மாவைக் கொண்டு ஆரோக்கியமான பிட்சாவை வீட்டிலேயே செய்யலாம். இந்த பிட்சா தோசை உடலுக்கு ஆரோக்கியமானது மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
உங்களுக்கு பிட்சா தோசை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிட்சா தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தோசை மாவு - 1 கப்
* குடைமிளகாய் - 1/4 கப் (நீளமாக கீறியது)
* வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வேக வைத்த ஸ்வீட் கார்ன் - 1/4 கப்
* பிட்சா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* சீஸ் - 1/4 கப் (துருவியது)
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 சிட்டிகை
* ஆரிகனோ - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், 2 கரண்டி தோசை மாவை தோசைக்கல்லில் ஊற்றி, அதைப் பரப்பாமல், அதைச் சுற்றி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து குறைவான தீயில் சிறிது நேரம் தோசையை வேக வைக்க வேண்டும்.
* பின்பு தோசையின் மேல் 1 டேபிள் ஸ்பூன் பிட்சா சாஸை பரப்பி, அதன் மேல் வெங்காயம், குடைமிளகாய், ஸ்வீட் கார்ன் தூவி, இறுதியாக துருவிய சீஸை பரப்பி விட்டு ஒரு நிமிடம் மூடி வைத்து, சீஸ் உருக வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அந்த தோசையை அப்படியே ஒரு தட்டில் எடுத்து வைத்து, அதன் மேல் சில்லி ப்ளேக்ஸ், ஆரிகனோ தூவினா, பிட்சா தோசை தயார்.
Image Courtesy: sharmispassions