Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்
Peerkangai Masala Recipe in Tamil: மதியம் சிம்பிளா அதிகம் மெனக்கெடாம சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காயை வைத்து சூப்பரான கிரேவி செய்யுங்கள். இந்த பக்குவத்தில் பீர்க்கங்காய் மசாலா செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

மேலும் இந்த பீர்க்கங்காய் மசாலா செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். முக்கியமாக இந்த கூட்டு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், பீர்க்கங்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு பீர்க்கங்காய் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பீர்க்கங்காய் - 1
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீ ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கடலை பருப்பு - ½ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ½ டீ ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி - 2 பெரியது (விழுதாக அரைத்தது)
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
- பீர்க்கங்காயை சுத்தமாக கழுவி, தோல் பகுதியை சீவி நீக்கி
கொள்ளுங்கள்.
- பின் அதை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து வைக்கவும்.
- பச்சை மிளகாயை கழுவி நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கொத்தமல்லி இலைகளை மண் இல்லாமல் தண்ணீரில் சுத்தமாக அலசி
பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- நன்கு பழுத்த பெரிய தக்காளியை கழுவி மேற்பகுதியில் இருக்கும் காம்பு
பகுதியை நீக்கி கொள்ளவும்.
- அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.
- பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி கருப்பு நிற பூஞ்சை இல்லாமல்
சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானது எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய
விடவும்.
- கடுகு நன்றாக வெடித்ததும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு
சிவக்கும் படி வறுக்கவும்.
- அதனுடன் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின் அதில் அரைத்து வைத்த தக்காளி விழுது மற்றும் தேவையான அளவு
உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா
சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- கடைசியாக நறுக்கி வைத்த பீர்க்கங்காயைச் சேர்த்து நன்றாக கலந்து
விடவும்.
- பின் தேவையான அளவு உப்பு மற்றும் காரம் சரிபார்த்து மூடி வைத்து, 5
நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 0 நிமிடங்கள் கொதிக்க
விடவும்.
- பின் நன்றாக வெந்திருக்கும் பீர்க்கங்காயை கரண்டி அல்லது மத்தால்
நன்றாக மசித்து விடவும்.
- அதனுடன் நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால்
சுவையான பீர்க்கங்காய் மசாலா ரெடி!
- இது சூடான இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் சாதம் என அனைத்திற்கும்
ஏற்ற சுவையில் இருக்கும்.



Click it and Unblock the Notifications
