Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
சப்பாத்திக்கு பீர்க்கங்காயை வெச்சு 10 நிமிடத்துல இப்படியொரு கிரேவி செஞ்சு பாருங்க... செமயா இருக்கும்...
Ridge Gourd Gravy Recipe In Tamil: இரவு பெரும்பாலும் உங்கள் வீட்டில் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் உருளைக்கிழங்கு கொண்டு கிரேவி செய்யாமல், வீட்டில் பீர்க்கங்காய் இருந்தால், அதைக் கொண்டு கிரேவி செய்யுங்கள்.
முக்கியமாக இந்த பீர்க்கங்காய் கிரேவியை வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக தேங்காயை அரைத்து ஊற்றுவதற்கு பதிலாக காய்ச்சிய பாலை சேர்த்து செய்யுங்கள். இதனால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது ஹோட்டலில் தரக்கூடிய கிரேவி போன்றே இருக்கும்.

உங்களுக்கு பீர்க்கங்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீர்க்கங்காய் - 1
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* பூண்டு - 12 பல் (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் . 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காய்ச்சி ஆற வைத்த பால் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதை சிறு துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடலைப் பருப்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை,
பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வெங்காயத்தை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் துண்டுகளாக்கப்பட்ட பீர்க்கங்காயை சேர்த்து நன்கு
வதக்கி, மூடி வைத்து 3-4 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க
வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள்
தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 2
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து நன்கு காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி கிளறி, மூடி வைத்து 2-3
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
பீர்க்கங்காய் கிரேவி தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications
