Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பட்டாணி மசாலா
உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் வீட்டில் பட்டாணி இருந்தால், அதைக் கொண்டு ஈஸியான மசாலா செய்யுங்கள். இந்த பட்டாணி மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
பட்டாணி பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். இதில் புரோட்டீன் அதிகம் உள்ளது. உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் வீட்டில் பட்டாணி இருந்தால், அதைக் கொண்டு ஈஸியான மசாலா செய்யுங்கள். இந்த பட்டாணி மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு சிம்பிளான பட்டாணி மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பட்டாணி - 1 கப் (நற்பதமானது/உலர்ந்தது)
* சீரகம் - 1/2 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
செய்முறை:
* நீங்கள் உலர்ந்த பட்டாணியைப் பயன்படுத்தினால், அந்த பட்டாணியை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். நற்பதமான பட்டாணியை பயன்படுத்தினால், இந்த பாயிண்ட்டை விடுங்கள்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளற வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்த நன்கு கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பட்டாணி மசாலா தயார்.
குறிப்பு:
* இந்த ரெசிபியில் உலர்ந்த பட்டாணி பயன்படுத்தப்பட்டுள்ளது. வேண்டுமானால் நற்பதமான பட்டாணியையும் பயன்படுத்தலாம்.
* வெககாயம் தக்காளி அரைக்கும் போது, அத்துடன் சிறிது தேங்காய் சேர்த்து, கிரேவி நல்ல ப்ளேவரில் இருக்கும்.
* நிறைய கிரேவி வேண்டுமானால், மொத்தமாக 3 தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications