Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!
Peanut Curd Chutney Recipe in Tamil: இந்திய உணவுகளில் தயிருக்கென்று எப்போதும் ஒரு தனியிடம் உள்ளது. அறுசுவை விருந்தாக இருந்தாலும் அதை தயிருடன் முடித்தால்தான் திருப்தியாக இருக்கும். தயிர் சுவையான பொருள் என்பதை விட அது ஆரோக்கியமான பொருள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் தயிரை வைத்து ஒரு சட்னி செய்யலாம் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?
உண்மைதான் தயிரை வைத்து சுவையான சட்னியை விரைவாக செய்யலாம். இட்லி, தோசைக்கு ஒரு வித்தியாசமான சட்னி செய்ய விரும்புகிறவர்கள் இந்த சட்னியை தாராளமாக முயற்சிக்கலாம். தயிருடன் வேர்க்கடலை சேர்த்து செய்யப்படும் இந்த சட்னியானது இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு சில நிமிடங்களில் செய்யக்கூடிய சைடிஷாகும். இந்த சுவையான சட்னியை செய்ய அதிகளவு பொருட்கள் தேவையில்லை, ஆனால் சுவையில் மற்ற எந்த சட்னிகளுக்கும் இது குறைந்தது அல்ல. இந்த சட்னி காரமாக இருக்காது, எனவே குழந்தைகள் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வேர்க்கடலை தயிர் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை தயிர் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ½ கப் வறுத்த வேர்க்கடலை
- ½ ஸ்பூன் சீரகம்
- 2 பச்சை மிளகாய்
- ½ கப் தயிர்
தாளிக்க:
- 1 ஸ்பூன் நெய்
- ½ ஸ்பூன் சீரகம்
- அரை கப் தயிர்
- தேவையான அளவு உப்பு
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை
செய்முறை:
- ஒரு மிக்சி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மென்மையான தூளாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடாக்கவும். பின்னர் சீரகம் சேர்த்து, அது வெடிக்கும் வரை வதக்கவும். அடுத்து, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து, மிதமான தீயில் 3 முதல் 4 நிமிடங்கள் வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து, மீதமுள்ள 1 கப் தயிரையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- மேலும் 3 முதல் 4 நிமிடங்கள் சமைத்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அவ்வவுதான் சூப்பரான வேர்க்கடலை தயிர் சட்னி ரெடி. இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
