For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுலபமான முறையில் வேர்க்கடலை பர்பி செய்வது எப்படி?

சிக்கி என்பது புகழ்பெற்ற தென்னிந்திய பண்டிகை ஸ்வீட் ஆகும். வறுத்த நிலக்கடலை மற்றும் வெல்லப் பாகு சேர்த்து செய்யப்படும் ரெசிபி ஆகும். இதைப் பற்றிய செய்முறை மற்றும் வீடியோ தொகுப்பு பற்றி காணலாம்.

Posted By: R. SUGANTHI Rajalingam
|

சிக்கி என்பது புகழ்பெற்ற தென்னிந்திய ஸ்வீட் ஆகும். வறுத்த நிலக்கடலை மற்றும் வெல்லப் பாகு சேர்த்து செய்யப்படும் ரெசிபி ஆகும். மூங்ஃபாலி சிக்கி மகராஷ்டிராவில் பண்டிகை மற்றும் விழாக்களின் போது விரும்பி செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். ஆனால் இருந்தாலும் தென்னிந்தியாவில் தான் இது மிகவும் புகழ்பெற்றது.

இந்த நிலக்கடலை மிட்டாய் எல்லா குழந்தைகளும் எப்பவும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ஆகும். எல்லா விழாக்களிலும் குறிப்பாக குளிர்காலத்தில் இந்த இனிப்பை செய்து மகிழ்வர். இதில் இரும்பு சத்து மற்றும் புரதச் சத்து நிறைய இருப்பதால் குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸாக கொடுக்கலாம். இதன் மொறு மொறுப்பான தன்மையும் கடித்து சாப்பிடும் போது உருகும் வெல்லத்தின் இனிப்பு சுவையும் உங்கள் நாக்கில் எச்சு ஊற வைத்து விடும்.

இந்த பீனட் சிக்கியை எளிதாகவும் விரைவாகவும் செய்து விடலாம். அதற்கு வெல்லப் பாகுவை சரியான பதத்தில் காய்ச்சி விட்டால் போதும். இதை சரியாக செய்து விட்டால் இந்த ரெசிபி உங்களுக்கு மிகவும் சுலபம். என்னங்க இந்த அருமையான ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய ஆசைப்படுகிறீர்களா. அப்போ பின்வரும் செய்முறை மற்றும் வீடியோ ரெசிபியை காணுங்கள்.

வேர்க்கடலை பர்பி ரெசிபி வீடியோ

பீனட் சிக்கி ரெசிபி
பீனட் சிக்கி ரெசிபி /மூங்ஃபாலி சிக்கி ரெசிபி செய்வது எப்படி /நிலக்கடலை மிட்டாய் ரெசிபி /சிக்கி ரெசிபி
Prep Time
5 நிமிடங்கள்
Cook Time
5 நிமிடங்கள்
Total Time
45 நிமிடங்கள்

Recipe By: காவ்யா ஸ்ரீ

Recipe Type: ஸ்வீட்ஸ்

Serves: 12 ஸ்வீட்ஸ்

Ingredients
  • நிலக்கடலை பருப்பு -3/4 பெளல் (200 கிராம்)

    வெல்லம் - 1 கப்

    தண்ணீர் - 1/2 கப்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
  • 1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நிலக்கடலையை சேர்க்க வேண்டும்.

    2. நிலக்கடலை பிரவுன் கலராக மாறி அதில் கருப்பு புள்ளிகள் தோன்றும் வரை வறுக்க வேண்டும்

    3. அதை ஒரு தட்டிற்கு மாற்றி 5 நிமிடங்கள் குளிர வைக்கவும்.

    4. உங்கள் உள்ளங்கைகளால் நிலக்கடலையை தேய்த்தால் அதிலுள்ள தோல்கள் உரிந்து விடும்.

    5. இப்பொழுது கொஞ்சம் ஊதி விட்டால் தோல் தனியாக பிரிந்து விடும். நிலக்கடலையை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

    6. இப்பொழுது தோலுரித்த நிலக்கடலையை ஒரு கிண்ணத்தை கொண்டு நசுக்கி லேசாக உடைத்து கொள்ளுங்கள்.

    7. ஒரு தட்டை எடுத்து அதில் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் தடவவும்

    8. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வெல்லத்தை சேர்க்க வேண்டும்

    9. உடனடியாக 1/4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    10. வெல்லம் நன்றாக கரையும் வரை நன்றாக கிளறி விடவும். மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    11. வெல்லப் பாகுவின் சரியான பதத்தை கண்டறிய பாகுவில் சில துளிகள் எடுத்து 1/4 கப் தண்ணீரில் விடவும்.

    12. அதில் வெல்லப் பாகு பரவவில்லை என்றால் வெல்லப் பாகு சரியான பதத்தில் இருக்கிறது என்பதை உறுதிபடுத்தி விடலாம்.

    13. அதனுடன் நிலக்கடலையை போட்டு நன்றாக கிளறவும்.

    14. இந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டவும்

    15. நன்றாக பரப்பி விட்டு மிதமான சூடு வரும் வரை 5 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.

    16. அதே நேரத்தில் கத்தியில் நெய் தடவிக் கொள்ளவும்.

    17. இப்பொழுது கலவையை செங்குத்தாக வெட்டவும்.

    18. பிறகு கிடைமட்டமாக வெட்டி சதுர வடிவ துண்டுகளை பெறலாம்.

    19. நன்றாக ஆறியதும் கவனமாக எடுத்து மிட்டாய்களை பரிமாறவும்.

Instructions
  • 1.வீ்ட்டில் கடலையை வறுப்பதற்கு பதிலாக வறுத்த நிலக்கடலையையும் வாங்கி பயன்படுத்தலாம்.
  • 2.நிலக்கடலையை உடைப்பது உங்கள் விருப்பம். சில பேருக்கு முழுக்கடலை பிடித்திருந்தால் அப்படியே வைத்துக் கொள்ளலாம்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 மிட்டாய்
  • கலோரிகள் - 150 கலோரிகள்
  • கொழுப்பு - 8 கிராம்
  • புரோட்டீன் - 4 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 17 கிராம்
  • சுகர் - 6.4 கிராம்
  • நார்ச்சத்து - 0.4 கிராம்

செய்முறை படத்துடன் விளக்கம் : வேர்க்கடலை பர்பி செய்வது எப்படி

1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நிலக்கடலையை சேர்க்க வேண்டும்.

2. நிலக்கடலை பிரவுன் கலராக மாறி அதில் கருப்பு புள்ளிகள் தோன்றும் வரை வறுக்க வேண்டும்

3. அதை ஒரு தட்டிற்கு மாற்றி 5 நிமிடங்கள் குளிர வைக்கவும்.

4. உங்கள் உள்ளங்கைகளால் நிலக்கடலையை தேய்த்தால் அதிலுள்ள தோல்கள் உரிந்து விடும்.

5. இப்பொழுது கொஞ்சம் ஊதி விட்டால் தோல் தனியாக பிரிந்து விடும். நிலக்கடலையை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

6. இப்பொழுது தோலுரித்த நிலக்கடலையை ஒரு கிண்ணத்தை கொண்டு நசுக்கி லேசாக உடைத்து கொள்ளுங்கள்.

7. ஒரு தட்டை எடுத்து அதில் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் தடவவும்

8. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வெல்லத்தை சேர்க்க வேண்டும்

9. உடனடியாக 1/4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

10. வெல்லம் நன்றாக கரையும் வரை நன்றாக கிளறி விடவும். மிதமான தீயில் கொதிக்க விடவும்.

11. வெல்லப் பாகுவின் சரியான பதத்தை கண்டறிய பாகுவில் சில துளிகள் எடுத்து 1/4 கப் தண்ணீரில் விடவும்.

12. அதில் வெல்லப் பாகு பரவவில்லை என்றால் வெல்லப் பாகு சரியான பதத்தில் இருக்கிறது என்பதை உறுதிபடுத்தி விடலாம்.

13. அதனுடன் நிலக்கடலையை போட்டு நன்றாக கிளறவும்.

14. இந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டவும்

15. நன்றாக பரப்பி விட்டு மிதமான சூடு வரும் வரை 5 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.

16. அதே நேரத்தில் கத்தியில் நெய் தடவிக் கொள்ளவும்.

17. இப்பொழுது கலவையை செங்குத்தாக வெட்டவும்.

18. பிறகு கிடைமட்டமாக வெட்டி சதுர வடிவ துண்டுகளை பெறலாம்.

19. நன்றாக ஆறியதும் கவனமாக எடுத்து மிட்டாய்களை பரிமாறவும்.

[ 4.5 of 5 - 128 Users]
English summary

பீனட் சிக்கி ரெசிபி /மூங்ஃபாலி சிக்கி ரெசிபி செய்வது எப்படி /நிலக்கடலை மிட்டாய் ரெசிபி /சிக்கி ரெசிபி

Chikki is a popular South Indian sweet that is prepared with roasted peanuts and jaggery syrup. Moongfali chikki is mainly prepared in Maharashtra during festivals; however, it is famous in most of South India as well.
Story first published: Monday, September 25, 2017, 15:32 [IST]
Desktop Bottom Promotion