Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
கசப்பே இல்லாத பாகற்காய் சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Pavakkai Sukka Recipe In Tamil: வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் பாகற்காய் என்றாலே ஓடிவிடுவார்களா? அப்படிப்பட்டவர்களை பாகற்காயை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் பாகற்காயை நீங்கள் வழக்கமாக செய்வது போன்று குழம்பாகவோ, பொரியலாகவோ செய்யாமல், சுக்கா போன்று செய்து கொடுங்கள். இந்த பாகற்காய் சுக்கா கசப்பு ஏதும் இல்லாமல் ருசியாக இருக்கும்.
அதுவும் இந்த பக்குவத்தில் பாகற்காய் சுக்கா செய்யும் போது, கசப்பு ஏதும் இருக்காது மற்றும் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இந்த பாகற்காய் சுக்கா சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். ஒருமுறை இந்த மாதிரி பாகற்காய் சுக்காவை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி இந்த பாகற்காய் சுக்காவை செய்யுமாறு சொல்வார்கள்.

உங்களுக்கு பாகற்காய் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாகற்காய் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு..
* சின்ன பாகற்காய் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4
* உப்பு - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (தட்டியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* பொடித்த வெல்லம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாகற்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் நறுக்கிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் நீரை
ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து,
மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்கள், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள பாகற்காயை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து
நன்கு கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு கிளறி, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் பாகற்காயை வேக வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால் பாகற்காய் நன்கு
வெந்திருக்கும். இப்போது அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்,
குழம்பு மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி, 10
நிமிடம் நன்கு பாகற்காயை சுருள வரும் வரை வேக வைத்து இறக்கினால்,
சுவையான பாகற்காய் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications